படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்து, ஷாருக்கானுக்கு காயம் – என்ன நடந்தது?

0
1617
- Advertisement -

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஷாருக்கான். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. மேலும், இவர் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவரது நடிப்பில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் பதான். இந்த படத்தில் தீபிகா படுகோன் நடித்திருக்கிறார். சித்தார்த் ஆனந்த் இந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

இந்த படம் யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கிறது. இந்த படம் இந்தியில் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இந்த படம் ஜனவரி 25ஆம் தேதி வெளியாக ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தின் பாடல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான போது பலவிதமான சர்ச்சைகளில் பதான் படமானது சிக்கியது.

- Advertisement -

இதனையடுத்து தற்போது ஷாருக்கான் நடித்து வரும் படம் தான் இயக்குனர் அட்லீ இயக்கும் ஜவான். இந்த படமானது அட்லீ ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அந்த படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். அதே நேரத்தில் வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருக்கிறார். மேலும் யோகி பாபு, பிரியாமணி என பல ரசிகர் பட்டாளமே இந்த படத்தில் நடித்திருக்கின்றனர்.

பெரிய பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டு வரும் இந்த படம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி திரைக்கு யாரும் என்றும், ட்ரைலர் ஜூலை 7ஆம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதே நேரத்தில் ஷாருக்கான் ஜவான் படத்தை தொடர்ந்து துங்கி என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தில் விக்கி கௌஷல் மற்றும் நடிகை டாப்ஸி நடித்து நடிக்க இருக்கின்றனர்.

-விளம்பரம்-

ஷாருக்கானுக்கு காயம் :

இந்த நிலையில் தான் ஷாருக்கான் அமெரிக்காவிற்கு படப்பிடிப்பிற்க்க சென்றுள்ளார். அப்போது படப்பிடிப்பில் கலந்து கொண்ட போது யாருமே எதிர்ப்பாராத விதமான விபத்து ஓன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஷாருக்கானின் மூக்கில் காயம் ஏற்பாடு அதிக ரத்தம் வெளியேறியுள்ளது. இதனால் பதறிப்போன படக்குழுவினர் ஷாருக்கானை மருத்துவமணையில் அனுமதித்த நிலையில் அவருக்கு முக்கில் அறுவை சிகிச்சை நடந்துள்ளது.

இதனால் ஷாருக்கான் மூக்கில் பேண்டேஜ் காட்டியபடி வந்துள்ளார். மேலும் படப்பிடிப்பும் ரத்தாகி இந்தியா வந்துள்ள ஷாருக்கான் தற்போது மும்பையில் அவரது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். மேலும் இந்த காயம் ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும் என்று மருத்துவர்கள் கூறியதாக சொல்லல்லப்படுகிறது. இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலானதை அடுத்து ரசிகர்கள் பலரும் ஷாருக்கான் விரைவாக குணமடைய வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.

Advertisement