சூர்யவம்சம் பஸ் பயணி, பாகவதர், அண்டர் டேக்கர் என்று ஷாமை கலாய்க்கும் மீம்ஸ்.

0
911
sham

தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். மேலும், ஒரு சில படங்களில் துணை நடிகராகவும் நடித்துள்ளார். இறுதியாக கடந்த ஆண்டு காவியன் என்ற படத்தில் நடித்திருந்தார் நடிகர் ஷாம். மேலும், வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து வந்தார் இந்த படத்தின் பணிகள் எப்போது துவங்கிய நிலையில் இந்த படம் பாதியிலேயே நின்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் நடிகர் ஷாம் வீட்டிலேயே சூதாட்டம் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் வெளியானது. இந்த தகவலின் பேரில், அங்கு சென்ற நுங்கம்பாக்கம் போலீஸார், சூதாட்டத்தில் ஈடுபட்டதாக நடிகர் ஷாம் உட்பட 14 பேரை கைது செய்தனர். நடிகர்கள் தவிர தொழிலதிபர்கள், தனியார் நிறுவன உயர் அதிகாரிகள், உணவக உரிமையாளர்கள், புதிய இயக்குனர், வழக்கறிஞர் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.

- Advertisement -

இந்த சூதாட்டத்தில் லட்சக்கணக்கான ரூபாய் பணபுழக்கம் நடைபெற்றது தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். நடிகர் ஷ்யாமை சொந்த ஜாமினில் போலீஸார் விடுவித்துள்ளனர். கொரோனா பிரச்சனை காரணமாக படப்பிடிப்புகள் முடங்கிய நிலையில் தனது வீட்டிலேயே நண்பர்களுடன் சேர்ந்து நடிகர் ஷாம் சூதாட்டம் விளையாடியதாக தகவல்கள் வெளியானது.

இந்த நிலையில் நடிகர் ஷாமின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலானது அதில் நீளமான முடியுடன் குண்டான தோற்றத்தில் ஆளே அடையாளம் தெரியாமல் மாறி இருக்கும் ஷாம். இதனை கண்டு மீம் கிரியேட்டர்கள் சூரிய வம்சம் படத்தில் வரும் பஸ் பயணி, அண்டர்டேக்கர், பாகவதர் என்று பலருடன் ஒப்பிட்டு மீம் கிரியேட் செய்து பங்கம் செய்து வருகிறார்கள்

-விளம்பரம்-
Advertisement