சர்கார் போஸ்டருக்காக மனைவியை இப்படி சொல்லலாமா .?பிரபல நடிகரை கதறவிட்ட ரசிகர்கள்! பாத்தா சிரிப்பீங்க.!

0
1327
Sarkar
- Advertisement -

தற்போது சமூக வலைத்தளங்கள் முழுக்க விஜய்யின் ‘சர்கார்’ படத்தின் பெயர் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது. விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் 3 வது முறையாக இணைந்துள்ள இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் டைட்டில் நேற்று (ஜூன்21 )வெளியானது.

-விளம்பரம்-

இன்று (ஜூன்22 ) நடிகர் விஜய்யின் 44 வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஜயின் பிறந்தநாளைக்கு ஒரு நாளைக்கு முன்பாகவே இந்த படத்தின் போஸ்ட்டர் வெளியாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளனர்.இந்த படத்தை தயாரித்துள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம் மேலும், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு இன்றும் ஒரு போஸ்டர் ஒன்றை வெளியொட்டிருந்தனர்.

- Advertisement -

விஜய்யின் 62 படமான இந்த படத்தின் போஸ்டர் வெளியானதையடுத்து ரசிகர்களை போன்றே சினிமா துறையில் இருக்கும் பிரபலங்களும் ட்விட்டர் பக்கத்தில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். இதனால் ட்விட்டர் பக்கம் முழுக்க ‘ சர்கார் ‘ படத்தின் போஸ்டர்கள் தான் ஆட்சி செய்து வருகின்றது.

இந்நிலையில் விஜய்யின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘சர்கார்’படத்தின் போஸ்டர் குறித்து பதிவிட்ட போது ‘ பட்டய கெளப்புது, மரண மாஸ் என் மனைவியை கூட இவ்வளவு ரசிச்சு பாக்கல’, என்று ட்வீட் செய்திருந்தார். இதற்கு ரீ ட்வீட் செய்திருந்த சாந்தனுவின் மனைவி கீகி என்றழைக்கபடும் கீர்த்தி ‘ உன் விஜய் அண்ணா வந்தா நீ தான் உலகத்தையே மறந்துடுவயே’,என்று பதிவிட்டுள்ளார். இதனால் ‘விஜய்க்காக மனைவியை இப்படியா பேசுவீங்க சாந்தனு’ என்று ட்விட்டர் வாசிகள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement