மோதி விளையாடு பாப்பா..! சிவகார்த்திகேயன் நடித்த குறும்படம்.! குழந்தை பாலியல் தொல்லை..!

0
1532
modhi-vilayadu-pappa
- Advertisement -

நடிகர் விஷால் நடித்த “சமர் ” படத்தை இயக்கிய இயக்குனர் திருவுடன் சிவகார்த்திகேயன் பள்ளி மாணவர்கள் முன் நின்று கொண்டிருக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தது. அந்த புகைப்படம் குறித்து இயக்குநர் திரு தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளிகையில், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஆவணப்படம் ஒன்றை இயக்க உள்ளோம். நல்ல நோக்கத்திற்காக இந்தப் படம் அமையும். மற்ற தகவல்கள் விரைவில். நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

-விளம்பரம்-

- Advertisement -

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் குறும்படம் குறித்து சமீபத்தில் வந்த தகவலின்படி பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அதனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தை உருவாக்கியுள்ளானர் என்று தெரியவந்தது.

இந்நிலையில் சில மணி நேரத்திற்கு முன்னர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள குறும்படம் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த குறும்படத்திற்கு “மோதிவிளையாடு பாப்பா” என்று தலைப்பை வைத்துள்ளனர். மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் பாலியல் தொல்லைகளை பற்றி சமூக அக்கறையுடன் உருவாக இருக்கும் இந்த குறும்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் சம்பளம் எதுவும் வாங்காமல் நடித்துக்கொடுத்துள்ளாராம் என்பது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த வீடியோ இணைப்பு.

-விளம்பரம்-
Advertisement