தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை – சிபிராஜ் பெருமிதம்.

0
9440
sibiraj
- Advertisement -

கோவை மாவட்டத்தில் பிறந்து ,எம்.ஜி.ஆர் அவர்களின் தீவிர ரசிகராக இருந்து தமிழ் திரை உலகில் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் சத்யராஜ். இவரது மகனான சிபிராஜ் ஸ்டூடன்ட் நம்பர் 1 என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பின்னர் இவர் பல்வேறு படங்களில் நடித்திருந்தலாம் எந்த படமும் இவருக்கு கைகொடுக்கவில்லை. இருப்பினும் இவரது நடிப்பில் வெளியான லீ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்திருந்தது. இந்த திரைப்படத்தின் மூலம் சத்தியராஜ் தயாரிப்பாளராகவும் அறிமுகமானார்.

-விளம்பரம்-

நடிகர் சிபிராஜ் அவரது தந்தை சத்யராஜுடன் இணைந்து பல படங்களில் இருவரும் மாஸ் காட்டி உள்ளார்கள். இதனைத்தொடர்ந்து நடிகர் சிபிராஜ் அவர்கள் கட்டப்பாவ காணோம் என்ற படத்தில் நடித்து உள்ளார். ஆனால்,இவர் பல படங்களில் நடித்து இருந்தாலும் தன் தந்தையை போல் சினிமாவில் பிரபலமாகவில்லை.

இதையும் பாருங்க : ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ் ராஜ். அதுவும் எந்த படத்தில் தெரியுமா ?

- Advertisement -

நடிகர் சிபிராஜ் கடந்த செப்டம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு ரேவதி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்கு பின்னர் இவர்களுக்கு தீரன் என்ற மகனும் பிறந்தார். சிபிராஜ் மகன் தீரன் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்றுவருகிறார். தீரன் கடந்த 9 ,10ம் தேதிகளில் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான டேக்வோண்டாபோட்டியில் கலந்து கொண்டு உள்ளார். அங்கு நடந்த போட்டிகளில் வென்று இரண்டு தங்கப் பதக்கங்களை வென்று உள்ளார்.

Dheeran Chinnamalai

இந்த நிலையில் தனது மகனுக்கு தீரன் என்று பெயர் வைக்க காரணத்தை கூறியுள்ளார் சிபிராஜ். நடிகர் சிபிராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை குறித்து எழுதியுள்ள பதிவில், ”இந்திய சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடி வீர மரணம் அடைந்து தமிழர்க்கு பெருமை சேர்த்த மாபெரும் போராளி! இவர் பெயரை என் மகனுக்கு சூட்டியதில் மிகவும் பெருமை படுகிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

-விளம்பரம்-

தற்போது நடிகர் சிபிராஜ் அவர்கள் ‘கபடதாரி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குநர் பிரதீப் கிருஷ்ண மூர்த்தி இயக்குகிறார். இந்த படத்தில் நந்திதா,பூஜா குமார், நாசர், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு சைமன் கிங் இசை அமைக்கிறார்கள். மேலும்,ராசாமதி அவர்கள் ஒளிப்பதிவும் செய்கிறார். இப்படத்தை கிரேட்டிவ் என்டர்டைனர்ஸ் மற்றும் விநியோகஸ்தர்கள் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள்.

Advertisement