ரஜினி படத்தில் நடிக்க மறுத்த பிரகாஷ் ராஜ். அதுவும் எந்த படத்தில் தெரியுமா ?

0
37196
prakashraj
- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் ரஜினிகாந்த். அவரது ரசிகர்களால் ‘சூப்பர் ஸ்டார்’ என்று அன்போடு அழைக்கப்படும் ரஜினிகாந்த் நடித்து 2002-ஆம் ஆண்டு வெளி வந்த படம் ‘பாபா’. இந்த படத்தினை பிரபல இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக மனிஷா கொய்ராலா டூயட் பாடி ஆடியிருந்தார். இப்படத்தை நடிகர் ரஜினிகாந்தே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘லோட்டஸ் இண்டர்நேஷனல்’ மூலம் தயாரித்திருந்தார்.

-விளம்பரம்-
Prakash Raj

சூப்பர் ஹிட்டான ‘படையப்பா’ படத்திற்கு பிறகு படங்களில் நடிக்காமல் இருந்தார் ரஜினி. அதன் பிறகு ரஜினியின் நடிப்பில் ‘பாபா’ படம் துவங்கப்பட்டதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்தது. ஆனால், படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் வெற்றி பெறவில்லை. தற்போது, இந்த படம் குறித்து இதுவரை வெளிவராத ஒரு தகவல் கசிந்திருக்கிறது.

இதையும் பாருங்க : நடிகர் அப்புக்குட்டி முதன் முதலில் அறிமுகமானது மம்முட்டி நடித்த இந்த படத்தில் தான். புகைப்படம் இதோ.

- Advertisement -

அது என்னவென்றால் ‘பாபா’ படத்தின் வில்லன் ரோல் பற்றியது தான். ‘பாபா’ படத்தில் ஒரு வில்லன் கதாபாத்திரம் இருக்கும். முதலமைச்சர் கதாபாத்திரம் தான் ‘பாபா’-வில் வில்லன். அந்த ரோலில் பிரபல மராத்தி நடிகர் பரத் தபோல்கர் நடித்திருந்தார். ஆனால், படம் ஆரம்பித்த போது அந்த ரோலில் நடிக்க கமிட்டானது அவர் இல்லையாம்.

பிரபல நடிகர் பிரகாஷ் ராஜ் தான் அந்த ரோலில் நடிக்க முதலில் ஒப்பந்தமானாராம். ரஜினியின் ‘படையப்பா’ படத்தில் ஒரு சிறிய ரோலில் மட்டுமே நடித்திருந்த பிரகாஷ் ராஜிற்கு, ‘பாபா’-வில் வில்லன் ரோல் என்றதுமே ரொம்ப ஹேப்பியாம். உடனே, பிரகாஷ் ராஜ் நடிக்க சம்மதம் தெரிவித்து விட்டாராம். மேலும், பிரகாஷ் ராஜிற்கு படத்தில் நடிப்பதற்கு ஒரு அட்வான்ஸ் தொகையும் கொடுக்கப்பட்டதாம்.

இதையும் பாருங்க : கர்ப்பமா இருக்கேன், டயர்டா இருக்கு, ஆனாலும் போகணும். விக்ரம் பிறந்தநாளில் இறந்து போன நடிகை சௌந்தர்யாவின் கடைசி நாட்கள் – இயக்குனர் உருக்கம்.

-விளம்பரம்-

படத்தின் ஆரம்பகட்ட ஷூட்டிங் ஷெட்யூலில், பிரகாஷ் ராஜின் கட்அவுட் மட்டுமே இடம்பெறுவது போல் காட்சியாம். அதற்கு முன்கூட்டியே பிரகாஷ் ராஜை வைத்து போட்டோஷூட் நடத்தப்பட்டு, அக்காட்சியை ஷூட் செய்துள்ளனர். பின், சில நாட்களுக்கு பிறகு பிரகாஷ் ராஜ் சம்பந்தப்பட்ட காட்சியின் ஷூட்டிங் எடுப்பதற்கு முன்பு, ரஜினி அவரை அழைத்து பேசியிருக்கிறார்.

இந்த படம் ஆரம்பித்த போது கதையில் உங்களுக்கு அதிக காட்சிகள் இருந்தது. இப்போது கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளோம். ஆகையால், உங்களுக்கு காட்சிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், பேசியபடி அதே சம்பளம் தான். உங்களுடைய கால்ஷீட் குறைவான நாட்களுக்கு கொடுத்தால் போதும் என்று பிரகாஷ் ராஜிடம் கூறினாராம் ரஜினி.

அதன் பிறகு முழு கதையையும் கேட்ட பிரகாஷ் ராஜ், தனக்கு முக்கியத் துவம் அதிகம் இல்லாததால் இந்த படத்தில் நடிக்க மறுத்து விட்டாராம். ஆனால், ரஜினி “பிரகாஷ் ராஜ் எடுத்த முடிவு சரி தான்” என்று கூறியதோடு, அவருக்கு கொடுத்த அட்வான்ஸ் தொகையையும் வாங்க வேண்டாம் என்று சொல்லி விட்டாராம். தற்போது, பிரபல இயக்குநர் சிவா ரஜினியை வைத்து இயக்கி வரும் ‘அண்ணாத்த’ படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement