வடசென்னை படம் இந்த படத்தின் காப்பியா.? பிரபல முன்னணி நடிகர் ட்வீட்..!

0
243
vada-chennai
- Advertisement -

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகை தனுஷ் நடித்துள்ள “வடசென்னை” திரைப்படம் இன்று வெளியாகியுள்ளத. பொல்லாதவன், ஆடுகளம் திரைப்படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணைந்துள்ளது தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ.

Siddarth

ரசிகர்களின் பெரும் எதிரிபார்ப்போடு வெளியாகியுள்ள இந்த திரைப்படம் நல்ல விமர்சங்களை பெற்று வருகிறது. இந்த படத்தின் கதையை வெற்றி மாறன் 15 ஆண்டுகளுக்கு முன்பே எழுத தொடங்கி இருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் இந்த படத்தின் கதையில் ஏற்கனவே நான் ஒரு படத்தில் நடித்துள்ளேன் என்று பிரபல நடிகர் சித்தார்த் ட்வீட் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகர் சித்தார்த், அதிர்ஷ்டவசமாக சில ஆண்டுகளுக்கு முன்பு “வடசென்னை படத்தை போலவே, நானும் (கேரம் போர்டு மற்றும் க்ரைம்) ஸ்டிக்கர் என்ற ஒரு படத்தில் நடித்திருக்கிறேன்.ஆனால், வெற்றிமாறன் இந்த படத்தை வேறு விதமாக இந்த படத்தை கையாண்டிருப்பார் என்று நம்புகிறேன்” என்று ட்வீட் செய்துள்ளார்.

Advertisement