பிரச்சனையில் சிம்பு படமா? ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகளை முன்வைத்த நடிகர் சிம்பு..!

0
164
Simbhu

`காலா’ படத்துக்குப் பிறகு ரஜினி நடிக்கும் திரைப்படம் `பேட்ட. `கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், பொங்கலுக்கு படம் ரிலீஸாக இருக்கிறது.மேலும், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியாகி இருந்தது.

அதே போல இயக்குநர் சிவா இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து இருக்கும் விஸ்வாசம் திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.  இரண்டு பெரிய நடிகர்களின் திரைப்படம் வெளியாக உள்ளதால் நடிகர் சிம்பு-சுந்தர் சி திரைப்படம் பொங்கலுக்கு வெளிவருவது கடினம் என்று பேச்சுக்கள் கிளம்பியது.

நடிகர் சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘மாநாடு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து சுந்தர் சிவயுடன் ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ என்ற புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது.

Simbhuannounccement

இந்நிலையில் தனது ரசிகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகர் சிம்பு. அதில் திட்டமிட்டபடி ‘வந்தா ராஜா வாதான் வருவேன்’ பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரசிகர்கள் பதட்டமடையாமல் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.