அமரன் கதையும் என் அப்பாவின் கதையும் ஒன்றுதான்- மேடையில் எமோஷனலாக பேசிய சிவகார்த்திகேயன்

0
160
- Advertisement -

தன்னுடைய தந்தை குறித்து எமோஷனலாக அமரன் படத்தின் வெற்றி விழாவில் சிவகார்த்திகேயன் பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே சிவகார்த்திகேயனின் அமரன் படம் குறித்த செய்தி தான் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் ‘அமரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரித்து இருக்கிறது.
மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டிருக்கிறது.

-விளம்பரம்-

இப்படத்தில், மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு ராணுவத்தில் இணைய வேண்டும் என்ற ஆசை எப்படி வந்தது. அதற்காக அவர் சந்தித்த எதிர்ப்புகள் என்ன? முகுந்த் வரதராஜனுக்கும் அவரது மனைவி இந்துவுக்கும் காதல் மலர்ந்தது எப்படி? ராணுவத்தில் முகுந்த் செய்த சாகசங்கள் என்ன? உள்ளிட்ட பல கேள்விகளுக்கான பதில்கள் தான் ‘அமரன்’ படத்தின் கதை. தீபாவளிக்கு வெளியான இப்படம் விமர்சன ரீதியாக மட்டும் இல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து இருக்கிறது. மேலும், இந்த படத்தை பார்த்து பிரபலங்கள், ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பல அரசியல் தலைவர்களும் பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

அமரன் வெற்றி விழா:

இந்த நிலையில் அமரன் படத்தின் உடைய வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. இதில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் சிவகார்த்திகேயன், இந்த படத்திற்கும் என்னுடைய அப்பாவிற்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. குறிப்பாக, இந்த படத்தினுடைய கிளைமாக்ஸ் காட்சி என்னுடைய வாழ்க்கையில் நடந்தது. சிறை துறையில் என்னுடைய அப்பாவை பற்றி கேட்டால் சொல்வார்கள். ஒருநாளும் என் அப்பா லீவு எடுக்கவே மாட்டார். தன்னுடைய வேலையில் அவ்வளவு சின்சியராகவும், நேர்மையாகவும் இருந்தவர்.

தன் தந்தை குறித்து சொன்னது:

இந்த படத்தை நான் எடுத்ததற்கு முக்கிய காரணம் என்னுடைய அப்பாதான். 21 வருடமாக அவருடைய நினைவில் இருந்து என்னால் மீண்டு வரவே முடியவில்லை. முகந்த் சாருக்கும் என்னுடைய அப்பாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் இருக்கிறது. ஒரு நாள் அப்பா ஊருக்கு வருகிறேன், இரண்டு நாள் லீவு என்று சொன்னார். அடுத்த நாள் நான் காலேஜ் முடித்துவிட்டு வரும்போது அப்பா இறந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். ஆம்புலன்ஸில் இருந்த அவருடைய உடலை எட்டி எட்டிப் பார்த்தேன். எல்லா சட்டங்களையும் முடிக்கும் போது என் அப்பாவுடைய எலும்பை பார்த்தேன். எல்லாம் உடைந்து இருந்தது.

-விளம்பரம்-

எமோஷனலாக சிவா சொன்னது:

அப்போது அப்பாவோட எலும்பு மட்டும் உடையவில்லை. 17 வயது பையனுடைய மனசும் தான் உடைந்தது. இந்த படத்தினுடைய கிளைமேக்ஸ் மாதிரியே என்னுடைய அம்மாவும் ஜனாதிபதியிடமிருந்து மெடல் வாங்கி இருந்தார்கள். இந்த படத்தின் மூலம் என்னுடைய அப்பாவை நான் பார்த்துவிட்டேன். முதல்வர் பாராட்டு, உங்கள் எல்லோருடைய பாராட்டுகள் உடைந்த எல்லா எலும்புத் துண்டுகளையும் ஒட்ட வைத்து என்னை இந்த இடத்தில் நிற்க வைத்து இருக்கிறது. இப்போது நான் அமரன் ஹீரோவோ,முகுந்த் வரதராஜனாகவோ, சிவகார்த்திகேயனாகவோ பேசவில்லை. தாசினுடைய மகனாக தான் பேசுகிறேன்.

பெருமைக்கு காரணம்:

என் அப்பா எங்கும் போகவில்லை. அனைவரின் கைத்தட்டிலும் இருக்கிறார். எப்போதுமே அப்பாவை பற்றி பேசினால் ஏன் எமோஷனல் ஆகி அழுகிறீர்கள்? என்று கேட்கிறார்கள். இன்னும் அவருடைய இறப்பிலிருந்து மீண்டு வர முடியவில்லை. இன்னமும் அந்த வலி என்னை விட்டுப் போகவில்லை. என் அப்பாவையே பார்ப்பதற்கு ஒரு வாய்ப்பு இந்த அமரன் ஏற்படுத்தி தந்திருக்கிறது. நான் மூணு குழந்தைகளுக்கு அப்பாவாக இருந்து அவரைப் போலவே பார்க்கிறேன். இருந்தாலும், அந்த வலி இருக்கு தான் செய்கிறது. என்னுடைய அப்பாவ பத்தி பயோபிக் எடுக்கலாமா என்று யோசிக்க தேவையில்லை. என் அப்பாவை பற்றி சொல்வதற்கு நான் இங்கு இருக்கிறேன். இந்த வாய்ப்பு கொடுத்த எல்லோருக்குமே நன்றி. இன்று என்னுடைய அப்பா ரொம்ப சந்தோசமாக இருப்பார் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருக்கிறார்.

Advertisement