அட, Sk இப்படி ஒரு பெருமைமிக்க வம்சாவழியை சேர்ந்தவரா ? அவரின் கொள்ளுத்தாக்கள் யார் தெரியுமா ?

0
1199
siva
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிகராக மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, பாடலாசிரியர் , தொகுப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இவர் விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தான் தன்னுடைய பயணத்தை தொடங்கினார். தற்போது இவர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகி கோடிகளில் சம்பளம் வாங்கும் முன்னணி நடிகராக இருக்கிறார். மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த படம் டாக்டர். நீண்ட நாட்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் வெற்றிப்படமாக டாக்டர் படம் அமைந்தது.

-விளம்பரம்-

இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் அவர்கள் அயலான், டான் ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இதனை தொடர்ந்து உலக நாயகன் கமலஹாசன் தயாரிப்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க இருகிறார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவுகள் எல்லாம் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். தற்போது இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகும் ஒரு புதுப் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். அந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்குகிறார்.

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்கள்:

தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கும் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். மேலும், இந்த படம் சிவகார்த்திகேயனின் 20வது படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த கட்டமாக சென்னை, புதுவை, லண்டன் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிகை மரியா என்பவர் கதாநாயகியாக நடிக்கிறார்.

சிவகார்த்திகேயனின் பூர்விகம்:

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பூர்வீக ஊருக்கு சென்று உள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. சிவகார்த்திகேயன் அவர்கள் திருவீழிமிழலை, திருநள்ளாறுக்கு சென்றுள்ளார். இதில் திருவீழிமிழலை சிவகார்த்திகேயனின் சொந்த ஊர் ஆகும். இந்தியாவோட தலைசிறந்த நாதஸ்வர கலைஞர்கள் ஆன சுப்பிரமணியம் பிள்ளை, நீடாமங்கலம் தவில் மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருவரும் சிவகார்த்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள். அதேபோல் ‘திருவீழிமிழலை சகோதரர்கள்’ என பேர் வாங்கிய கோவிந்தராஜப் பிள்ளை, தட்சிணாமூர்த்தி பிள்ளை ஆகிய இருவரும் சிவகார்த்திகேயனின் தாத்தாக்கள்.

-விளம்பரம்-

சிவகார்த்திகேயன் தாத்தாக்கள்:

மேலும், திருவிழிமிழலைக்கு சென்ற சிவகார்த்திகேயன் அங்கு உள்ள பள்ளிக்கு சென்று மாணவர்களையும் மக்களையும் சந்தித்து இருக்கிறார். பின் திருநள்ளாறு கோவிலுக்கும் சென்று இருக்கிறார். அப்போது அங்கு சென்ற போது எடுத்த புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் புகழ்பெற்ற இசை கலைஞர்களின் வம்சத்தில் வந்தவரா! சிவகார்த்திகேயன் என்று புகழ்ந்தும், பாராட்டியும் வருகிறார்கள். அதுமட்டும் இல்லாமல் சிவகார்திகேயனின் கொள்ளுத்தாத்தாக்கள், தாத்தாக்கள் பற்றிய தேடல் வைரலாகி வருகிறது.

This image has an empty alt attribute; its file name is siva.jpg

திருவீழிமிழலை சகோதரர்கள்:

கீர்த்தனைகளை வாயால் பாடுவது போன்று நாகஸ்வரத்தில் இசைத்தவர்கள் முற்காலத்தில் அதிகம். அண்மைக் காலம் முதல் இன்று வரை அவ்வகையைச் சேர்ந்தவர்களை விரல் விட்டு எண்ணத்தான் வேண்டும். அந்த வகையில் ஸாஹகத்தியமாகவே கற்று முதலில் பலமுறை பாடிப்பாடி மெருகேற்றியப் பின்னர் நாகஸ்வரத்தில் வாசித்த வித்வான்களில் குறிப்பிடத்தக்கவர்கள் திருவீழிமிழலை சகோதரர்கள் என்ற பெயரில் வரலாறு படைத்த சுப்பிரமணிய பிள்ளையும், நடராஜசுந்தரம் பிள்ளையும். இவர்களுடைய இசை மரபுக்குச் சிறிதும் பிழைபடுவதில்லை.

திருவீழிமிழலை சகோதரர்கள் பற்றிய தகவல்:

திருவீழிமிழலை ஸ்வாமிநாத நாகஸ்வரக்காரர், சிவபாக்கியம் அம்மாள் என்போர், இவரைப் பெற்றவர்கள். இவர்கள் தந்தையிடம் தொடங்கிப் பின்பு, தாய் மாமன் சுப்பையா பிள்ளையிடம் நாகஸ்வரம் பயின்று தன் இளவல் நடராஜசுந்தரம் பிள்ளையுடன் இணைந்து கச்சேரிகள் செய்ய ஆரம்பித்துப் புகழேணியின் உச்சியை இவர் விரைவில் எட்டினார். இவர்கள் சிறந்த பாடகர், மற்றும் ஏராளமான கீர்த்தனைகளைப் புனைந்துள்ளார்கள். தமிழகம் மட்டுமின்றிக் கர்நாடகம், ஆந்திரம், கேரளம், மற்றும் வடஇந்தியா எங்கும் “திருவீழிமிழலை சகோதரர்கள்” நாகஸ்வரக் கச்சேரிகள் இடம் பெறாமல் இருந்ததில்லை.

Advertisement