உங்களால் தான் என் கனவுக்கு உயிர் கிடைத்தது – சிவகார்த்திகேயன் உதவியால் மருத்துவ சீட்டு பெற்ற ஏழை மாணவி நெகிழ்ச்சி.

0
764
sk
- Advertisement -

நீட் தேர்வில் வெற்றி பெற செய்து ஏழை மாணவிக்கு மருத்துவ சீட் வாங்கியதார்க்கு சிவகார்த்தியேன் உதவியுள்ளது பலரின் பாராட்டை பெற்று வருகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டுகளுக்கு முன்னர் அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர்வர்களும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டிவந்தனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தது. இருப்பினும் அணைத்து எதிர்ப்பையும் மீறி நீட் தேர்வு நடைபெற்று தான் வந்தது.

-விளம்பரம்-

அனிதா போது பல்வேறு நடிகர்கள் நேரில் சென்று அனிதாவின் குடும்பத்தினரை பார்த்தனர். நடிகர் விஜய் அனிதாவின் குடும்பத்தினரை நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறி உதவியும் செய்தார். மேலும், மாணவி அனிதாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கு வந்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், அவரது உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார். நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தொடர்ந்து கோரிக்கைகள் எழுந்து வந்தாலும் ஆண்டாண்டு நீட் தேர்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.

- Advertisement -

ஆனால் இந்த தேர்வில் தமிழகத்தில் இருந்து குறைவான மாணவர்களே தேர்ச்சி பெறுகிறார்கள். அப்படியே தேர்ச்சி பெற்றாலும் அவர்களுக்கு மருத்துவ சீட்டு 100% கிடைத்துவிடுவதில்லை இப்படி ஒரு நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன், மாணவி சஹானாவுக்கு நீட் பயிற்சிக்கான மொத்த செலவையும் நடிகர் ஏற்றிருந்தார். இந்த நிலையில் ஏழை மாணவி ஒருவரின் மருத்துவ கனவை சிவகார்த்திகேயன் நனவாகியுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணியை அடுத்த பூக்கொல்லை பகுதியைச் சேர்ந்த டெய்லர் கணேசன்- சித்ரா ஆகியோரின் மகள் சஹானா. கஜா புயலால் சேதமடைந்த வீட்டில் மின்சார வசதி இல்லாததால் சூரிய வெளிச்சத்திலும், பள்ளி அருகே இரவில் தெருவிளக்கு வெளிச்சத்திலும் படித்த இவர், மருத்துவராக வேண்டும் என்ற உறுதியுடன் நீட் தேர்வுக்கு தன்னை தயார்படுத்திவந்துள்ளார்.

மாணவி சஹானாவின் நிலையை அறிந்த நடிகர் சிவகார்த்திகேயன், சஹானாவை தஞ்சாவூரில் உள்ள தனியார் நீட் பயற்சி மையத்தில் சேர்த்து, கடந்த ஒரு ஆண்டாக பயிற்சி பெற உதவி செய்தார். இந்நிலையில், நடந்து முடிந்து நீட் தேர்வில் 273 மதிப்பெண்கள் பெற்று, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில் திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு கிடைத்து, நேற்று (நவம்பர் 9) சேர்ந்துள்ளார். . சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ள மாணவி சகானா எனது மருத்துவ கனவிற்கு உயிர் கொடுக்க பலரும் உதவி செய்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் செய்த உதவியால் எனது கனவு நனவாகியுள்ளது.

-விளம்பரம்-

அவர்கள் மருத்துவ படிப்பிற்கான முழு செலவையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி அரசு பள்ளி மாணவர்களுக்காக முதலமைச்சர் பிறப்பித்த உள் ஒதுக்கீடு ஆணையம் தனது மருத்துவ கனவை நிறைவேற்றியதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் நன்றி தெரிவித்துள்ளார் மாணவி சகானா.

Advertisement