சூரி ஹோட்டலை திறந்து வைத்த சிவகார்த்திகேயன். ஹோட்டல பாருங்க எப்படி இருக்குனு.

0
435023
soori
- Advertisement -

சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களும் நடிப்பையும் தாண்டி தனிப்பட்ட முறையில் எதாவது தொழிலை செய்து வருவது ஒன்றும் புதிதான விஷயம் அல்ல. அதிலும் பெரும்பாலான நடிகர் நடிகைகளின் இரண்டாவது தொழில் ஹோட்டல் அல்லது உணவகமாக தான் இருக்கும். தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு பிரபலங்களுக்கு சொந்தமாக சொகுசு ஹோட்டல்கள் கூட இருக்கிறது. அந்த வகையில் சூரியும் தற்போது தனக்கென்று ஒரு தொழிலை தொடங்கியுள்ளார். இதற்கான திறப்பு விழா சமீபத்தில் நடைபெற்றது.

-விளம்பரம்-

காமெடி நடிகர் சூரி சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார். தமிழில் உள்ள பெரும்பான்மையான நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி.

இதையும் பாருங்க : அட கடவுளே சூப்பர் சிங்கர் பிரகதியா இது. வாயில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்.

- Advertisement -

ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி. இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்திருந்தார் சூரி. ஆனால், அந்த படத்திலும் சூரியின் காமெடி அவ்வளவாவக எடுபடவில்லை. ஆனால், நம்ம வீட்டு பிள்ளை படத்தின் ஒரு சிறப்பு நிகழ்ச்சிக்காக பட குழுவினர் சன் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் பங்குபெற்றனர். அப்போது சூரி செய்த காமெடிகள் அனைவரையும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.

இந்த நிகழ்ச்சியை பார்த்த அனைவருமே சூரிக்கு இயக்குனர்கள் சொல்லித்தரும் காமெடியை விட அவராக செய்யும் காமெடி நன்றாகவே இருக்கிறது என்று கூறி வந்தனர். அந்த அளவிற்கு நிஜ வாழ்விலும் மிகவும் நகைச்சுவை நிறைந்த ஒரு நபராக இருந்து வருகிறார் சூரி. நடிகர் சூரி ஒரு முன்னணி காமெடியனாக வளம் வருவதற்கு முன்பாக சிறு சிறு கதாபாத்திரத்தில் முகம் காண்பித்து வந்தார். பிரபு தேவா நடித்த ‘நினைவிருக்கும் வரை ‘ ,’ஜேம்ஸ் பாண்டு’ தீபாவளி போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சூரி. தற்போது தமிழில் ஒரு முன்னணி காமெடியனாக இருந்து வருகிறார்.

-விளம்பரம்-

இந்த நிலையில் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் நடிகர் சூரி அம்மன் உணவகம் என்ற உணவகத்தை திறந்துள்ளார். இந்த உணவகத்தை நடிகர் சூரி-யின் நண்பருமான நடிகர் சிவகார்த்திகேயன் திறந்து வைத்தார்.இது நடிகர் சூரி-யின் ஆறாவது ஹோட்டல் கிளை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உணவகம் திறப்பு விழாவில் பேசிய சூரி, எங்களுடைய முதல் கிளையிலிருந்து அனைத்து கிளையையும் சிவகார்த்திகேயன் தான் திறந்துவைத்தார். எங்கள் உணவகத்திற்கு கிடைத்த மக்களின் ஆதரவை தொடர்ந்து வந்ததால் அடுத்தடுத்து கிளைகளை திறக்க முடிந்தது. மதுரையில் அனைத்தும் சைவ உணவாக இருக்கிறது, எனவே அடுத்து திறக்கும் உணவகத்தை அசைவ உணவகம் திறக்க வேண்டும் என்று சிவகார்த்திகேயன் கூறி இருந்தார். அதனால் தற்போது இந்த உணவகத்தை அசைவ உணவாக ஆரம்பித்து உள்ளோம் என்று கூறியுள்ளார் .

Advertisement