அட கடவுளே சூப்பர் சிங்கர் பிரகதியா இது. வாயில் அடித்துக்கொள்ளும் ரசிகர்கள்.

0
298527
Pragathi
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களை கவரும் வகையில் பல வித்யாசமான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர் சிங்கரில் பங்கு பெற்ற பல்வேறு போட்டியாளர்கள் தற்போது சினிமாவில் அசத்தி வருகிறார்கள் அந்த வகையில் இரக்கத்தையும் ஒருவர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் தனது வசீகரமான குரலின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பாடகி பிரகதி. விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக பிரபலமாக ஒட்டிக்கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை , சீனியர், ஜூனியர் என்று மாறி மாறி ஒளிபரப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் 2012 ஆம் கலந்து கொண்ட பிரகதி இரண்டாம் பரிசை பெற்றார்.

-விளம்பரம்-

இவர் இந்திய கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்தின் உறவினர் என்பதும் குறிப்படத்தக்கது. சிறுவயது முதலே இசை மீது கொண்ட ஆர்வத்தால் சிறு வயது முதலே சங்கீதத்தை கற்று வந்தார். பாடகி பிரகதி 2010 ஆம் ஆண்டு ஜெயா தொலைக்காட்சியில் நடந்த ஒரு ஜூனியர் பாடல் நிகழ்ச்சியில் பங்குபெற்று முதல் பரிசை வென்றார். அதன் பின்னரே 2012 ஆம் விஜய் தொலைக்காட்சியில் நடந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசை வென்றார். அதன் பின்னர் தமிழில் அனிருத், ஜி வி பிரகாஷ் போன்றவர்கள் இசையில் சினிமாவில் பல பாடல்களை பாடியுளளார் பிரகதி.

- Advertisement -

இறுதியாக யுவன் இசையமைபில் கண்ணே கலைமானே என்ற படத்தில் ‘செவ்வந்தி பூவே’ என்ற பாடலை பாடி இருந்தார். அடையாளமே தெரியாமல் மாறிப்போன பிரகதி குருபிரசாத்தின் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இவரது குரலுக்கு மட்டுமல்லாமல் சமூக வலைதளம் இவருக்கு என்று ஒரு தனிப்பட்ட ரசிகர் கூட்டமே இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணமே எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அம்மணி அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருவது தான்.

ஆனால், சூப்பர் சிங்கரில் மிகவும் குடும்பப் பாங்கான பெண்ணாக இருந்த பிரகதி நிஜ வாழ்க்கையில் சற்று கவர்ச்சியாக இருந்துவருகிறார். சமீபத்தில் ஒரு சில புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வந்தன. பிரகதியின் கவர்ச்சி போசை கண்டு சூப்பர் சிங்கர் பிரகதி இப்படி போஸ் கொடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். இது ஒருபுறம் இருக்க பிரகதியும், நடிகர் அசோக் செல்வனும் காதலிப்பதாககடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படங்கள் அதிக அளவில் வலம் வந்தன. இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் ஏற்கனவே தெரியும் என்றும், விரைவில் இவர்கள் திருமண செய்துகொள்ள போவதாவும் செய்திகள் பரவியது.

-விளம்பரம்-

ஆனால், அந்த தகவலை முற்றிலும் மறுத்தார் பிரகதி, இதுகுறித்து விளக்கமளித்த அவர், நான் யாரையும் காதலிக்கவில்லை, திருமணம் செய்யப் போவதும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு 21 வயது தான் ஆகிறது. கல்லூரியில் படித்துக் கொண்டே பாடும் நான் திருமணம் செய்யும் இடத்தில் இல்லை. காதல் செய்தியை பார்த்து முதலில் காமெடியாக இருந்தது. ஆனால் அனைத்து ஊடகங்களும் இது குறித்து செய்தி வெளியிடவே நான் அதிருப்தி அடைந்தேன். என்னை பற்றி மீடியா தவறான தகவலை பரப்புவதால் அதிருப்தி அடைந்துள்ளேன் என்று கூறி இருந்தார்.



Advertisement