அதெல்லாம் டப்பிங்ல பாத்துக்கோங்க – சீரியல் நடிகையால் நடிப்பதையே நிறுத்திய சிவகுமார்.

0
1990
sivakumar

தமிழ் சினிமா உலகில் ஹீரோவாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் நடிகர் சிவகுமார். இவரின் யதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தவர். சிவகுமார் அவர்கள் மிகச் சிறந்த ஓவியர் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது மகன்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் தமிழில் முன்னணி நடிகர்களாக இருக்கிறார்கள். நடிகர் சிவகுமார் 1965 காலகட்டத்தில் இருந்தே நடித்து வருகிறார். துணை கதாபாத்திரம் துவங்கி ஹீரோ, வில்லன் என்று பல கதாபாத்திரங்களில் நடித்துவிட்டார் சிவகுமார்.

சினிமா மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் இவர் பல்வேறு சிரியல்களில் நடித்துள்ளார்.தமிழில் வீட்டுக்கு வீடு வாசப்படி பந்தம் சித்தி அண்ணாமலை போன்ற பல்வேறு ஹிட் தொடரில் நடித்து இருக்கிறார் சிவகுமார். சிவகுமார் கால கட்டத்தில் வந்த பலர் இன்னமும் நடித்து வரும் நிலையில் நடிகர் சிவகுமார் பல ஆண்டுகளுக்கும் முன்னரே நடிப்பதை நிறுத்திவிட்டார். இறுதியாக இவர் 2001 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான பூவெல்லாம் உன் வாசம் படத்தில் நடித்திருந்தார்.

இதையும் பாருங்க : திமுக சார்பாக போட்டியிட விருப்பமனு அளிக்கப்பட்ட நிலையில் – ஸ்டாலினிடம் விமல் மீது புகார். என்ன புகார்னு பாருங்க.

- Advertisement -

அதே போல சன் தொலைங்கட்சியில் 2006 ஆம் ஆண்டு துவங்கி 2008 ஆம் ஆண்டு நிறைவடைந்த ‘லட்சுமி’ என்ற தொடரில் நடித்திருந்தார். இந்த சீரியலுக்கு பின்னர் இவர் வேறு எந்த சீரியலிலோ படத்திலோ நடிக்கவில்லை. இதற்கான காரணத்தையும் அவர் இது வரை கூறியதும் இல்லை. இப்படி ஒரு நிலையில் பிரபல நடிகரும் இயக்குனருமான சித்ரா லக்ஷ்மணன் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

வீடியோவில் 8 : 52 நிமிடத்தில் பார்க்கவும்

அதாவது நடிகர் சிவகுமார் ஒரு முறை சீரியலில் நடித்துக்கொண்டு இருக்கும் போது அதே சீரியலில் நடித்துக்கொண்டு இருந்த நடிகை ஒருவர் போனில் கத்தி பேசினாராம் பேசினாராம். உடனே அந்த சின்ன பெண்ணிடம் நான் நடித்து முடிக்கும் வரை கொஞ்சம் போன் பேசாமல் இருக்க சொன்னாராம் சிவகுமார். அதற்கு அந்த நடிகையோ, இத்தனை வருசமாக நடிக்கிறீங்க நீங்க பேசறத டப்பிங்ல பாத்துக்கோங்க என்று சொன்னாராம். அந்த சம்பவத்தால் தான் நடிகர் சிவகுமார் நடிப்பதை நிறுத்திவிட்டாராம்.

-விளம்பரம்-
Advertisement