பிரபல இயக்குனரின் மகனுடன் விளையாடிய Sk – அட, இந்த இயக்குனருக்கு இவ்ளோ பெரிய மகனா ?

0
1324
sk
- Advertisement -

கோலிவுட்டில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து வருகிறார். இவர் நடிகர் மட்டுமில்லாமல் சிங்கர், மிமிக்ரி, தொகுப்பாளர் என பல திறமைகளை கொண்டவர். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த ஹீரோ படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. இவருடைய திரைப்படங்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்றுத் தந்துள்ளது. இதனை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவர்கள் டாக்டர் என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

-விளம்பரம்-
Image

அதுமட்டுமில்லாமல் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருந்த டாக்டர் படம் அக்டோபர் 9 ஆம் தேதி திரையரங்கிற்கு வெளிவர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தற்போது சிவகார்த்திகேயன் அவர்கள் இயக்குனர் பி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இந்த படத்தின் ஷூட்டிங் போது எடுத்த புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு இருந்தார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலானது.

இதையும் பாருங்க : தடுப்பூசியை சாக்காக சொல்லி சாமர்த்தியமாக ஜாமின் வாங்கியுள்ள மீரா. என்ன சொல்லியுள்ளார் பாருங்க.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் பிரபல இயக்குனர் மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தற்போது சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனரான சுசீந்திரன் அவர்களின் மகனுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

Image

தற்போது அந்த புகைப்படத்தை அவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதை ரசிகர்கள் அனைவரும் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். மேலும், இந்த புகைப்படத்தை பார்த்து சிவகார்த்திகேயன் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கப் போகிறாரா? என்றும் பல கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

-விளம்பரம்-

தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான இயக்குனர்களில் சுசீந்திரனும் ஒருவர். இவர் இயக்குனர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், திரைப்பட தயாரிப்பாளர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் என பன்முகங்கள் கொண்டவர் . இவர் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகில் இயக்குனராக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து இவர் நான் மகான் அல்ல, ராஜபாட்டை, பாண்டியநாடு, பாயும் புலி, ஈஸ்வரன் போன்ற பல படங்களை இயக்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement