கார் விபத்தில் சிக்கிய ஓட்டுனரை முதல் அர்ஜுன் போல கைகளில் தூக்கி சென்ற சோனு சூட், வைரல் வீடியோ.

0
452
Soonu
- Advertisement -

கார் விபத்தில் சிக்கிய நபரை முதல்வன் படத்தில் வரும் அர்ஜுன் போல தன்னுடைய கைகளால் தூக்கி சென்று காப்பாற்றிய பாலிவுட் நடிகர் சோனு சூட்டின் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் மிகப் பிரபலமான திரைப்பட நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சோனு சூட். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் மாடல், திரைப்பட தயாரிப்பாளரும் ஆவார். தமிழில் 1999-ஆம் ஆண்டு வெளியான படம் ‘கள்ளழகர்’. இந்த படத்தின் மூலம் தான் நடிகர் சோனு சூட் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து திரைப்படம் நெஞ்சினிலே, சந்தித்த வேளை, மஜ்னு, சாகசம், ராஜா, சந்திரமுகி, ஒஸ்தி, தேவி என பல தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.

-விளம்பரம்-

மேலும், இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பல மொழி படங்களில் வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆகியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் பெரும்பாலும் படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் எல்லோருக்கும் ஹீரோவாக திகழ்கிறார். இவர் நடிகராக மட்டும் இல்லாமல் மக்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

- Advertisement -

சோனு சூட் செய்த உதவிகள்:

மேலும், 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பு தொடங்கிய காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இவர் அறக்கட்டளை ஒன்று தொடங்கி பல உதவிகளை செய்தது அனைவருக்கும் தெரிந்ததே. கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை இறக்குமதி செய்துள்ளார். மஹாராஷ்டிரா மற்றும் தானேவில் இருந்து புறப்பட 10 சொகுசு பேருந்துகளை இலவசமாக ஏற்பாடு செய்திருந்தார். அவரது 6 மாடி கொண்ட ஹோட்டலை ‘கொரோனா’ வைரஸ் பாதிக்கப்பட்ட நேயாளிக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் ஓய்வு எடுக்க பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்திருந்தார்.

கொரோனா காலத்தில் சோனு சூட் செய்தது:

சமீபத்தில் கூட விவசாயி ஒருவருக்கு டிராக்டர் ஒன்றை வாங்கி கொடுத்தார். கோவிட்-19 தொற்றால் வீடு திரும்ப முடியாமல் ரஷ்யாவில் சிக்கியிருந்த 105 தமிழக மாணவர்கள் சென்னை திரும்ப நடிகர் சோனு சூட் உதவியுள்ளார். இப்படி கொரோனா பேரிடர் காலத்தில் சோனு சூட் பல்வேறு உதவிகளை செய்து இருக்கிறார். கொரோனா நேரத்தில் வெளியே வர பயந்த பிரபலங்கள் மத்தியில் சோனு செய்த உதவிகள் வேற லெவல். இதனால் இவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்து இருந்தார்கள். சமீபத்தில் கூட சோனு சூட்டிற்கு சிலை கூட வைத்து நன்றிகளை தெரிவித்து இருந்தனர். அதுமட்டும் இல்லாமல் நடிகர் சோனு சூட் அவர்கள் மக்களுக்கு உதவி செய்தவர்காக தனது சொத்துக்களை அடமானம் வைத்து இருந்ததாக கூறப்படுகிறது.

-விளம்பரம்-

சோனு சூட்டை மக்கள் கொண்டாட காரணம்:

இப்படி இவர் நடிகராக மட்டுமில்லாமல் பல சமூக சேவைகளை செய்து பஞ்சாப் மக்களுக்கு கடவுளாகவே திகழ்ந்தார். இவரை பஞ்சாப் மாநிலமே ஹீரோவாக தலையில் கொண்டாடுகிறது. உண்மையாலுமே சினிமாவுலகில் நடிக்கும் நடிகர்கள் இப்படியெல்லாம் செய்வார்களா? என்று ஆச்சரியப் பட வைக்கும் வகையில் சோனு உதவி செய்து கொண்டிருக்கிறார். இதனால் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளது. கடந்த ஆண்டு அவருடைய பிறந்தநாளை ஒட்டுமொத்த மாநிலமே சிறப்பாக கொண்டாடி இருந்தது. இந்நிலையில் சோனு சூட் அவர்கள் விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

விபத்தில் சிக்கிய நபரை காப்பாற்றிய சோனு சூட்:

பஞ்சாப் மாநிலம் மோகா அருகே உள்ள பைபாஸ் சாலையில் இரு கார்கள் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாக சென்ற சோனு சூட் விபத்தை பார்த்து இருக்கிறார். அங்கு இருந்த எல்லோரும் வேடிக்கை பார்த்தார்கள். ஆனால், சோனு அவர்கள் விபத்துக்குள்ளான காரின் உள்ளே சிக்கிக் கொண்ட ஓட்டுனரை பத்திரமாக மீட்டு தன்னுடைய காருக்கு கைகளால் தூக்கி சென்றார். பின் காயமடைந்த நபரை தன் மடியில் படுக்க வைத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். மேலும், அந்த நபரின் மருத்துவ செலவையும் சோனு சூத்தே ஏற்று இருக்கிறார்.

Advertisement