10 வருட நண்பரின் திடீர் இழப்பு – சோகத்தில் காமெடி நடிகர் சூரி..!

0
1221
Soorifriend
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக விளங்கி வருகிறார் நடிகர் சூரி, வடிவேலு மற்றும் சந்தானம் ஆகியோர் காமெடி நடிகர் என்ற அந்தஸ்தில் இருந்து வெளியேறிய பிறகு சூரி தான் தற்போது வெளியாகும் பெரும்பான்மையான படங்களில் காமெடியனாக கலக்கி வருகிறார். சமீபத்தில் நடிகர் சூரியின் நெருங்கிய நண்பரின் இழப்பு நடிகர் சூரிக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-

Soori

- Advertisement -

நடிகர் சூரிக்கு கடந்த 10 ஆண்டுகளாக சங்கர் என்ற ஒரு நண்பர் இருந்துள்ளார். ஐ ஏ எஸ் அகாடமி நிறுவன அதிகாரியான சங்கர் கடந்த சில நாட்களாக குடும்ப பிரச்சனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (அக்டோபர் 11) சங்கர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த தகவலை அறிந்த சூரி, சங்கரின் உடலை காண சென்னையில் உள்ள ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு இன்று காலை வந்துள்ளார்.

மருத்துவமனையில் சங்கரின் உடலை காண வந்த சூரி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், சங்கரை எனக்கு 10 வருடத்திற்கு மேலாக தெரியும். இன்று காலை இயக்குனர் சற்குணம் தான் எனக்கு சங்கர் தற்கொலை செய்து கொண்ட தகவலை தெரிவித்தார், எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது.இங்கு வந்து அவருடைய உடலை பார்த்த போது என் மனம் தாங்கிக்கொள்ளவில்லை.

-விளம்பரம்-

சங்கர் மிகவும் நல்ல மனிதர் தைரியமும் உறுதியும் கொண்ட நபர். ரெண்டு மாதத்திற்கு முன்பாக நான் ஒரு பெரிய பிரச்சனையில் இருந்த போது அவர் தான் எனக்கு தைரியமும் தெம்பையும் அளித்தார். அவர் கூறிய தைரியங்களை நான் எனது மனைவியுடன் அடிக்கடி கூறியுள்ளேன். அவரால் இன்று பல பேர் மிக பெரிய பொறுப்பில் இருக்கிறார்கள். எத்தனையோ பேருக்கு அறிவையும் ஆற்றலையும் கொடுத்தவர் சங்கர். ஆனால், சங்கர் இப்படியொரு முடிவை எடுப்பார்னு நான் கொஞ்சம் நினைக்கவே இல்லை என்று மிகவும் உருக்கமுடன் பேசியுள்ளார் நடிகர் சூரி.

Advertisement