சண்டாளா, இதுக்கா அங்க போனனு என் பொண்டாட்டி திட்டுவா- நிருபர் கேட்ட கேள்விக்கு சூரி அளித்த பதில்.

0
6173
soori
- Advertisement -

சீனாவில் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகையே உலுக்கி கொண்டு இருக்கிறது. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து போக்குவரத்து, கடைகள், பொது இடங்கள் என அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. பல பிரபலங்கள் கொரோனா குறித்து பல விழிப்புணர்வு வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சூரி அவர்கள் தற்போது பேட்டி ஒன்று அளித்து உள்ளார்.

-விளம்பரம்-
actor soori get autograph for chennai police and emotional speech

அதில் அவர் கூறியிருப்பது, இந்த கஷ்டமான காலகட்டத்தில் நாம் அனைவரும் கடந்து சென்று இருக்கிறோம். எல்லோரும் பாதுகாப்பாக வீட்டுக்குள்ளேயே இருங்கள். வெளியில் சென்றால் சமூக இடைவெளியை கடைபிடியுங்கள், கையில் க்ளவுஸ் போடுங்கள், மாஸ்க் அணிந்து கொள்ளுங்கள், கையை சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற உயிரைப் பாதுகாப்பதற்காக பல விதிமுறைகளை சோசியல் மீடியாவில் எல்லாம் சொல்லிக்கொண்டு வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நேரத்தில் இரவும் பகலும் என்று பார்க்காமல் கால நேரம் பார்க்காமல் அவர்களுடைய குடும்பங்களை எல்லாம் பிரிந்து தங்களுடைய உயிரை பயணம் வைத்து 24 மணி நேரம் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் காவல்துறை. இப்படி போராடிக்கொண்டிருக்கும் காவல்துறையினர் 50 பேருக்கும் இந்த கொரோனா தொற்று வந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இந்த தருணத்தில் அவர்களுக்கு நான் நன்றி சொல்கிறேன். நாம் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது. உண்மையாகவே ஹீரோக்கள் என்றால் காவல்துறை அதிகாரிகள், மருத்துவர்கள், செவிலியர்கள் தான். அதனால் நான் இவர்கள் இடம் ஆட்டோகிராப் வாங்க வந்து இருக்கேன்.

இதை நான் ரொம்ப பெருமையா நினைக்கிறேன். இப்படி இவர் பேசிக்கொண்டிருக்கும்போது பத்திரிக்கையாளர் ஒருவர் மது கடை குறித்து ஏதாவது சொல்லுங்கள் என்று கேட்டதற்கு நான் பேசணும்னா யோசித்து தான் சொல்லணும். அவர்களிடம் வாழ்த்து சொல்ல வந்த நானே அவர்கள் கையால்லே தூக்கி உள்ளே உட்கார வைக்காதீங்க. அப்புறம் என் வீட்டில் இருக்குற என் பொண்டாட்டி புள்ளைங்க எல்லாம் சண்டாளா இதுக்கு தான் அங்க போன என்று கேட்பார்கள் என்று வெகுளித்தனமாக கூறினார். தற்போது இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-
Advertisement