சோசியல் மீடியாவில் படங்கள் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்வது பற்றி சூரி போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் காமெடி நடிகனாக இருந்து ஹீரோவாக கலக்கி கொண்டிருப்பவர் சூரி. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மாமன்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியிருக்கிறார். இந்த படம் தாய்மாமன் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த வாரம் இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இந்த படம் வெற்றியடைய வேண்டும் என்று சூரி உ டைய ரசிகர்கள் சில பேர் மண் சோறு எல்லாம் சாப்பிட்டு இருந்தார்கள்.
மாமன் படம்:
இதனால் இதை கண்டித்து நடிகர் சூரி பேட்டி அளித்து இருந்தார். இதை அடுத்து ஒவ்வொரு மாவட்டமாக சென்று சூரி ரசிகர்கள் உடன் சேர்ந்து படம் பார்த்து பேட்டி அளித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சோசியல் மீடியாவில் திருட்டுத்தனமாக படங்களை பதிவிறக்கம் செய்வது தொடர்பான சர்ச்சை சமீப காலமாகவே தொடர்ந்து கொண்டு வருகின்றது. மேலும், இது தொடர்பாக சூரி சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார்.

சூரி பதிவு:
அதில் அவர், ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல, அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று. இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன. ஒரு படம் உருவாகிறது என்றால், அது ஒரு குழந்தை பிறப்பதைப் போல. கதையிலிருந்து தொடங்கி, படப்பிடிப்பு, பின்னணி வேலை, தொகுப்பு, இசை, விளம்பரங்கள் என ஒவ்வொரு கட்டமும் உணர்வுகள் கலந்து மாறாத உறுதியுடன் கட்டியெழுப்பப்படுகிறது.
ஒரு திரைப்படம் என்பது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல… அது பலரின் கனவுகளும், உயிரோட்டமான உழைப்புகளும் சேர்ந்த ஒன்று.
— Actor Soori (@sooriofficial) May 23, 2025
இந்த உரை என் திரைப்படத்துக்காக மட்டும் அல்ல. ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கும் மேற்பட்டோரின் பணி, தியாகம், நம்பிக்கை, மற்றும் அக்கறை இருக்கின்றன.
ஒரு…
திருட்டுத்தனம் பதிவு:
ஒரு படம் வென்றாலும், தோற்றாலும் அது ஒரு பயணம். அந்த வலிகள், மகிழ்ச்சிகள், நம்பிக்கைகள் அனைத்தும் கலந்து இருக்கின்றன. இவ்வளவு முயற்சிக்குப் பிறகு, சிலர் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவிறக்கம் செய்து பார்த்துவிட்டு, அதை பெருமையாக பகிரும் போது, அது நம் உள்ளத்தை சிதைக்கிறது. அந்த ஒரு ‘வியூ’க்காக, யாரோ ஒருவரின் வருடங்கள் கொண்ட உழைப்பைக் கலைத்து விடுகிறோம். திரைப்படங்கள் மக்களை மகிழ்விப்பதற்காக மட்டுமல்ல, சில நேரங்களில் சமூகத்தில் முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கும் வழிமுறையாகவும் உருவாகின்றன.

சில படம் யாரோ ஒருவரின் வாழ்க்கையின் பிரதிபலிப்பு. இத்தனை தன்னலமில்லாத உழைப்பை மதிக்காமல், திருட்டுப் பதிவிறக்கம் செய்வது சட்டவிரோதம் மட்டுமல்ல; மனிதநேயத்தையும் கைவிடும் செயல். எனவே என் பணிவான வேண்டுகோள்: திருட்டுப் பதிவிறக்கம் செய்யாதீர்கள். திரைப்படங்களைச் சரியான வழியில் பார்த்து, அதை உருவாக்கியவர்களின் உழைப்புக்கு மரியாதை கொடுங்கள். உங்கள் ஆதரவு தான் ஒரு படைப்பாளிக்கு மிகப்பெரிய விருது. நாம் ஒவ்வொருவரும் மாற்றத்திற்கான பொறுப்புடன் செயல்பட்டால், திரையுலகம் இன்னும் உயரலாம் என்று கூறி இருக்கிறார்.






