ஒரே நேரத்தில் ஒரே வயிற்றில் பிறந்த இரட்டை பிறவிகள் – தன் பிறந்தநாளில் சூரி கொடுத்த சர்ப்ரைஸ்.

0
29977
soori
- Advertisement -

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான காமெடி நடிகரான சூரி ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து தற்போது விவேக், சந்தானம் அளவிற்கு காமெடியில் சிறந்து விளங்கி வருகிறார். காமெடியில் வடிவேலுக்கு பாடி லங்குவெஜ், சந்தானம் என்றால் கலாய்ப்பது என்று நாம் அனைவரும் அறிவோம். அதுபோல சூரி ஆங்கிலத்தில் அடிக்கடி பிழையாக பேசும் ஒரு புது யுத்தியை பயன்படுத்து காமெடியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். அதை வைத்துகொண்டே இது வரை பல படங்களில் இவரது காமெடியை ஹிட் அடிக்க வைத்துள்ளார்.

-விளம்பரம்-

தமிழில் உள்ள முன்னணி நடிகர்களான விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு நடிகர்களின் படத்தில் காமெடி நடிகராக நடித்துவிட்டார் சூரி. ஆனால், சமீப காலமாக இவரது காமெடி மக்களுக்கு சலிப்பையே ஏற்படுத்தி வருகிறது, இருப்பினும் வரிசையாக பட வாய்ப்புகளை கையில் வைத்திருக்கிறார் நடிகர் சூரி.

இதையும் பாருங்க : திறந்துவிட்ட ஓவர் கோட் – அப்பட்டமாக உள்ளாடையை காட்டி கிறங்கடித்த கிரண்

- Advertisement -

தொடர்ந்து காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வந்த சூரி தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக படு பிட்டாக மாற்றியுள்ளார் சூரி. இப்படி ஒரு நிலையில் சூரி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இப்படி ஒரு நிலையில் தனது பிறந்தநாளில் தான் ஒரு இரட்டை பிறவி என்று கூறி ஷாக் லொடுத்துள்ளார்.

இதுகுறித்து தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள சூரி, ஒரே வயிற்றில் ஒரே நேரத்தில் ரெட்டை பிள்ளையாய் எனக்கு அடுத்து பிறந்தவன் லெட்சுமணன். உழைப்பிலும் திறமையிலும் உயர்ந்தவன். என்னைவிட புகழ் பெற்றிருக்க வேண்டியவன். முந்திப் பிறந்ததால்தான் இந்த முன்னேற்றம் என்றால், உனக்குப் பின்னால் பிறந்திருப்பேன் தம்பி… அடுத்த ஜென்மத்தில் எங்கள் அனைவருக்கும் நீயே அண்ணனாக பிறக்க வேண்டுகிறேன் பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி என்று பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement