தமிழ் படங்களில் நடிகர்கள் பிரபலமாக இருப்பது ஒன்றும் ஆச்சர்யமான விடயம் இல்லை. துணை நடிகர்களாக இருந்து மக்கள் மனதில் பதிந்திருப்பது தான் கடினம். அந்த வகையில் துணை நடிகராக தமிழ் சினிமாவில் இருந்து வரும் ஸ்ரீமன், லவ் டுடே சேது, போக்கிரி உள்ளிட்டபல படங்களில் நடித்தவர்.
— actor sriman (@ActorSriman) May 11, 2018
முதலில் துணை நடிகராக நடித்து வந்த நடிகர் ஸ்ரீமன் பின்னர் காமெடியான கதாபாத்திரகைள நடித்து வருகிறார். குறிப்பாக நடிகர் லாரன்ஸ் நடித்த காஞ்சனா படத்தில் இவரது நடிப்பு அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. அதனால் தான் நடிகர் லாரன்ஸ் தான் இயக்கிய காஞ்சனா 2 படத்திலும் இவரை நடிக்க வைத்தார்.
நடிகர்களை படத்தில் வித்யாசமான கெட் அப் போடுவதில் ஆச்சர்யமில்லை. ஆனால், சமீபத்தில் நடிகர் ஸ்ரீமன் ஒரு பிச்சைக்காரரை போன்ற கெட் அப்பில் இருப்பது போன்று ஒரு பகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பொதுவாக பாலா படத்தில் தான் இது போன்ற வித்யாசமான கெட் அப்பிள் நடிகர்கள் இருப்பார்கள். இதனால் இந்த கெட் அப்பிள் நடிகர் ஸ்ரீமனை பார்த்த ரசிகர் ஒருவர் “என்ன பாலா படமா” என்று கமென்ட் செய்துள்ளார். அதற்க்கு ஸ்ரீமன் “அப்படியெல்லாம் இல்லை, இது வேறு படத்திற்காக. ஆனால், பாலா படத்தின் அழைப்பிற்காக காத்துக் கொண்டிருக்கிறேன் ” என்று அந்த ரசிகருக்கு பதிலைத்துள்ளார். நடிகர் ஸ்ரீமன் தற்போது காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.