என் அப்பா நலமாக தான் இருகிறார். தந்தையுடன் புகைப்படத்தை படத்திவிட்ட சுந்தராஜனின் மகன்.

0
50842
Sundarrajan
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் எப்போதும் பிரபல நடிகர்கள் குறித்து ஏதாவது ஒரு சர்ச்சையை சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிளப்பி கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இயக்குனர் ஆர். சுந்தரராஜன் குறித்து ஒரு வதந்தி இணையதளங்களில் பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகர் ஆர். சுந்தர்ராஜன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர் என பன்முகங்கள் கொண்டவர். இவர் தாராபுரம் என்கிற ஊரில் பிறந்தவர். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அன்று சிந்திய ரத்தம் என்ற படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கியும், நடித்தும் உள்ளார். இவர் பெரும்பாலும் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும், நகைச்சுவை கதாபாத்திரங்களிலும் நடித்து உள்ளார். மேலும், இவர் இயக்கத்தில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இவர் ராஜேஸ்வரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளது. அசோக் சுந்தர்ராஜன், தீபக் சுந்தரராஜன் ஆவார்.

- Advertisement -

இதையும் பாருங்க : என்ன ஆடுற ? அங்காடி தெரு ஹீரோவை வெளுத்து வாங்கும் வசந்த பாலன். வைரலாகும் வீடியோ.

இந்நிலையில் நடிகரும், இயக்குநருமான ஆர். சுந்தரராஜன் அவர்கள் இறந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால், இதை எந்த ஒரு பத்திரிகைகளும் பெரிதாக குறிப்பிடவில்லை. இது உண்மையா? இல்லையா? என்று தெரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். அதற்கு பிறகு சிலர் வேண்டாதவர்கள் தான் இந்த மாதிரி போட்டோ சூட் தயார் செய்து சுந்தர்ராஜன் இறந்ததாக வெளியிட்டு உள்ளனர் என்று தெரிய வந்து உள்ளது. சமீபத்தில் கூட ஆர். சுந்தர்ராஜன் அவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறித்து அவதூறாக பேசி இருந்தார். இதைத் தொடர்ந்து இப்படி செய்திகள் வருவது இதை வேண்டுமென்றே யாரோ செய்தார்களா? இல்லையோ? என்று பல கேள்விகளை எழுப்பி வருகின்றன.

-விளம்பரம்-

Hi guys ,This is my father R.Sundarrajan (film director & actor) he is all good and he'S IN shooting for a movie in…

Ashok Sundarrajan ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಶುಕ್ರವಾರ, ಫೆಬ್ರವರಿ 28, 2020

இதை தொடர்ந்து சுந்தர்ராஜன் மகன் என் தந்தை குறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, என்னுடைய தந்தை நலமாகத்தான் உள்ளார். அவர் சென்னையில் நடந்து கொண்டிருக்கும் படத்தின் படப்பிடிப்பில் உள்ளார். இந்த மாதிரி என் தந்தை குறித்து எந்த ஒரு வதந்திகளையும் பரப்பாதீர்கள். அவருக்கு எந்த உடல் நிலை பிரச்சனையும் கிடையாது. அவர் ஆரோக்கியமாக உள்ளார் என்று கூறி இருந்தார். பின்னர் தன் தந்தை உடன் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். தற்போது இந்த தகவல் வைரலாக பரவி வருகிறது.

Advertisement