கங்குவா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் சூர்யா. இவர் பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன், பிரபல நடிகர் கார்த்தியின் அண்ணன் ஆவார். மேலும், நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கின்றது.

அந்த வகையில் தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கங்குவா’. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
கங்குவா படம் :
இந்த படம் முழுக்க முழுக்க 3Dயில் உருவாக்கப்பட்டு வருகிறது. மேலும், வரலாற்று பின்னணியை மையமாக வைத்து இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்குனர் உருவாக்கி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 20 மொழிகளில் வெளியாக இருக்கிறது. அக்டோபர் 10-ஆம் தேதியே இந்த படம் திரையரங்களில் வெளியாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் படத்தின் ரீலிஸ் தள்ளிப்போனது.

படம் குறித்த தகவல்:
பின் இந்த படம் நவம்பர் 14ம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ட்ரெய்லர் வெளியாகி இருந்தது. பிரம்மாண்டத்துடன், பின்னணி இசையில் மிரள வைக்கும் அளவிற்கு கங்குவா ட்ரைலர் இருக்கிறது. இதுவரை பார்த்திடாத அளவிற்கு சூர்யா நடித்திருக்கிறார். போர், ரத்தம், பகை, பழிக்குப் பழி என்று ஒட்டுமொத்த ட்ரெய்லரும் கலவரமாக இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான பிரமோஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது.

உதயநிதி குறித்து சொன்னது:
இந்நிலையில் கங்குவா படத்தினுடைய இசை வெளியீட்டு விழா நடைபெற்று இருந்தது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு இருந்தார்கள். அப்போது சூர்யா, என்னோட பாஸ், என்னுடைய நண்பர், காலேஜில் எனக்கு ஜூனியர். என்னை வைத்து இரண்டு படம் எடுத்தவர். இப்போது துணை முதலமைச்சராக இருப்பவர். அவரை நான் எப்போதும் பாஸ் என்று தான் செல்லமாக அழைப்பேன். எப்போதுமே அவர் பெரிய இடத்தில் இருந்து வந்தவர் மாதிரியே நடந்து கொள்ள மாட்டார்.
https://youtube.com/shorts/WytoJj5bbyM?si=1SI2lkxNwssfPZI8
விஜய் குறித்து சொன்னது:
யாரும் அவரை எளிதாக அணுகலாம், பேசலாம். உதயநிதிக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். அதேபோல் என்னுடைய இன்னொரு நண்பர். தனக்கென புதிய பாதை, புதிய பயணத்திற்காக இருக்கிறார். அவருடைய வரவும் நல்வரவாக இருக்கட்டும் என்று விஜய் குறித்து பேசி இருந்தார். இப்படி இரண்டு கட்சி தலைவர்கள் குறித்து யாருக்கும் கஷ்டம் வராத அளவிற்கு சூர்யா பேசியிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று என்று கூறியிருக்கிறார்கள்.






