கர்ப்பமான பின் நடத்திய முதல் போட்டோ ஷூட் – புகைப்படத்தை பகிர்ந்த பாக்கியலட்சுமி ஜெனி.

0
12792
jennifer

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ஜெனிபர் முதன் முறையாக தான் கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த தொடரின் லீட் ரோலில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரத்தில் சுசித்ராவும் அவரது கணவராக சதீசும் நடித்து வருகிறார். அதே போல இந்த தொடரில் ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஜெனிபர்.

பாக்கியலட்சுமி தொடரில் நடித்து வரும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் வரும் அம்மன் சீரியலிலும் நடித்து வருகிறார். ஆனால், இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னவோ பாக்கியலக்ஷ்மி தொடர் தான். இப்படி ஒரு நிலையில் பாக்கியலட்சுமி தொடரில் இருந்து ஜெனி விலகி இருந்தார்.இது குறித்து வீடியோ மூலம் விளக்கமளித்துள்ள ஜெனி, இந்த சீரியலில் இருந்து விலகுவதற்கு இரண்டாம் காரணம் இருக்கிறது. அதில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல் மற்ற மொழிகளிலும் சென்று கொண்டு இருக்கிறது.

இதையும் பாருங்க : குத்து சண்டையோடு சேர்த்து அரசியலும் பேசியுள்ள ‘சார்பட்டா பரம்பரை’ – முழு விமர்சனம் இதோ.

- Advertisement -

தற்போது அதே ட்ராக்கில் இந்த சீரியலும் செல்வது எனக்கு உடன்பாடு இல்லை என்பதால் நானாக இந்த சீரியலில் இருந்து விலகியதாக கூறி இருந்தார். அதே போல் ராதிகா கதாபாத்திரத்தில் நெகட்டிவ் இமேஜ் வருவது போல இருப்பதால் விலகி விட்டதாகவும் முதல் காரணத்தை கூறி இருந்தார். ஆனால், அந்த ரெண்டாவது காரணம் என்ன என்பதை அந்த வீடியோவில் ஜெனிபர் சொல்லவில்லை.

இப்படி ஒரு நிலையில் அதற்கான வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் ஜெனிபர். அந்த வீடியோவில் அவர் சொன்ன இரண்டாவது காரணம் என்னவெனில் ஜெனிபர் தற்போது இரண்டாம் முறையாக கர்ப்பமாக இருக்கிறாராம். ஏற்கனவே இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இப்படி ஓர் நிலையில் முதன் முறையாக Pregancy Photoshoot நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement