தமிழ் சினிமாவில் சமீபகாலமாக பல்வேறு வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகமான வண்ணம் இருக்கிறார்கள். அந்த வகையில் பிரபல நடிகரான அருண்பாண்டியன் அம்மக்களும் சமீபத்தில் சினிமாவில் அறிமுகமானார். தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தின் முன்னணி நடிகர்களான விஜயகாந்த், ராம்கி, நெப்போலியன் போன்ற நடிகர்களின் படங்களில் பல குணசித்ர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் நடிகர் அருண் பாண்டியன். மேலும், “முற்றுகை, ஊழியன்” போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார்
தொடர்ந்து படங்களில் நடித்து வந்த அருண் பாண்டியன் சினிமாவில் வாய்ப்பு குறையவே பட தயாரிப்புகளில் இறங்கிவிட்டார். வில்லு, அங்காடி தெரு, முரட்டு காளை போன்ற பல்வேறு படங்களை தயாரித்த அருண் பாண்டியன், சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஜூங்கா’ படத்தை தயாரித்து இருந்தார். அருண் பாண்டியனுக்கு கவிதா, கீரனா, கீர்த்தி என்ற மூன்று மகள்களும் இருக்கின்றனர்.
இதையும் பாருங்க : பாரதி கண்ணம்மா சீரியலில் இருந்து வெளியேறிய அகிலன் – அவருக்கு பதில் இனி இவர் தான்.
அதில் கீர்த்தி பாண்டியன் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவும் அறிமுகமானார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியான ‘கனா’படத்தில் கதாநாயகனாக நடித்த தர்ஷன் நடித்த தும்பா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை கீர்த்தி பாண்டியன். இறுதியாக ‘அன்பிற்கினியால்’ படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
மேலும், சிறு வயதில் இருந்தே தான் ஒல்லியாக இருந்ததால் பலர் தன்னை ‘குச்சி’ என்று கேலி செய்ததாகவும், நடிக்க வந்த பின்னரும் அந்த கேலி தொடர்ந்தது. அதனால் எனக்காக உடல் எடையை கூட்ட நினைத்து 6 மாத காலம் கடுமையாக முயற்சி செய்து உடல் எடையை கூட்டினேன். உடல் எடை கூட அதிகம் சாப்பிட வேண்டும் என்று காலை 5 மணிக்கு எல்லாம் கூட எழுந்து சாப்பிட்டேன். நான் பெற்று இருக்கும் ஒவ்வொரு 100கிராம் எடையும் என் கடின உழைப்பு தான் என்று கூறி தனது பிகினி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.