தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக காமெடி நடிகராக இருந்து வந்த வடிவேலு இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார்.அந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதை தொடர்ந்து பல்வேறு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர்தான் வடிவேலுக்கு தலைவலி ஏற்பட்து . வடிவேலு சிம்புதேவன் இயக்கத்தில் வெளியான இருபத்தி மூன்றாம் புலிகேசி படத்தின் வெற்றியை தொடர்ந்து 24ம் புலிகேசி படத்தை எடுக்க துவங்கினார்கள். இந்த படத்தையும் ஷங்கர் தான் தயாரித்து வந்தார்.
ஆனால், வடிவேலு அவர்கள் நான் இந்த படத்தில் நடிக்கமாட்டேன். அப்படி நான் நடிக்க இருந்தால் பெரிய நடிகர்களின் பட்டாலும் இருக்கக்கூடாது மற்றும் எனது ஆடை வடிவமைப்பாளரை நான் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் பல விதிமுறைகளை விதித்தார். இதனால் ஷங்கருக்கும் வடிவேலுக்கும் நிறைய வாக்குவாதம் ஏற்பட்டது என்று கூட சொல்லலாம், மேலும் இந்த படம் அப்படியே முடங்கி விட்டது. இதனால் வடிவேலு மீது பயங்கர கோபத்துடன் இருந்தார் சங்கர்.
இதையடுத்து படத்தில் தான் நடிக்கப்போவது இல்லை என்று வடிவேலு கூற, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலு மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வடிவேலுவிற்கு தமிழ் படங்களில் நடிக்க தடை விதித்துள்ளது.மேலும், அவரை யாரும் படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்ய கூடாது என்றும் அறிக்கை வெளியிட்டது. இருப்பினும் வடிவேலு தற்போதும் சமூக வலைதளத்தில் பேசப்பட்டு வரும் ஒரு நபராக தான் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (செப்டம்பர் 12) தனது பிறந்தநாளை கொண்டாடினர். தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள வடிவேலு ‘ சீக்கிரமே மிகப் பெரிய என்ட்ரீயோடு வருவதாகக் கூறிய அவர், வாழ்க்கையென்றால் எங்கே இருந்தாலும் சைத்தான் சனியன் எல்லாம் இருக்கத்தான் செய்யும். எல்லோர் வாழ்க்கையிலும் அவை உண்டு. என் வாழ்க்கையில் மட்டும் இல்லாமல் இருக்குமா’என்று கூறியுள்ளார் வடிவேலு.
கடந்த மே மாதம் நடிகர் வடிவேலு திருச்செந்தூரில் உள்ள கோவிலுக்கு தனது குடும்பத்தினருடன் தரிசனத்திற்கு சென்றிருந்தார். சுவாமி தரிசனத்தை முன்னிட்டு செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு பேசிய போது ‘வெப்சிரீஸ் வேலைகள் செம ஸ்பீடுல நடந்துட்டு இருக்கு. யார் இயக்குநரு, என்ன வெப்சீரிஸ்னு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன்’ என்று கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.