‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ தொடரில் இருந்து முக்கிய நடிகர் விலகிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன், தம்பிகளுக்கு இடையேயான பாசக்கதையை கொண்டது. கடந்த ஆண்டு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது.
தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிப்பரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசனில் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வசந்த், ஆகாஷ் நடிக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இவர் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இதனால் இவர் பெருமிதமாக இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார். பாண்டியன் வீட்டுக்கு வந்ததிலிருந்து தங்கமயில் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் தங்கமயில் பாண்டியன் வீட்டிற்கு வந்ததிலிருந்தே கலாட்டா கலவரங்களாக இருக்கிறது.
சீரியல் கதை:
அவர் செய்யும் வேலைகள் எதுவுமே மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. குறிப்பாக சாப்பாடு எடுத்துக்கொண்டு கடைக்கு செல்வது மாமியாருக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இதை அவர் எவ்வளவோ சொல்லியும் தங்கமயில் கேட்கவில்லை. அது மட்டும் இல்லாமல் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். இதனால் வீட்டில் பல கலவரங்கள் வருகிறது. இதனால் இந்த சீரியல் ஆரம்பத்த நாளை விட தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது.
வசந்த் குறித்த தகவல்:
மேலும், இந்த சீரியலில் செந்தில் நாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்தவர் வசந்த். இவர் இதற்கு முன்பே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி இருந்த ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பாரதிதாசன் காலனி போன்ற தொடர்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்தார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர் 2 வில் ஹேமாவுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டு இருந்தார். இது மட்டும் இல்லாமல் விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 5ல் போட்டியாளராக வசந்த் பங்கேற்று இருந்தார்.
சீரியலை விட்டு விலகும் நடிகர்:
இந்த நிகழ்ச்சி மூலம் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், இவர் சில வாரங்களுக்கு முன்பு தான் வெளியேறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ல் விலகி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவருக்கு பதில் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகத்தில் நடித்த வெங்கட் நடிகர் இருக்கிறார். ஏற்கனவே மீனா-ஜீவா ஜோடி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் இவர்களுடைய ஜோடி இணைவது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அதுமட்டுமில்லாமல் வசந்த் இந்த தொடரில் இருந்து விலகுவதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை? இதனால் ரசிகர்கள் வருத்தத்தில் கேட்டு வருகிறார்கள்.