1.82 கோடி ஏமாந்து இருக்கேன், ஆனா எல்லாரும் என்ன கிண்டல் பண்றாங்க – இரிடியம் மோசடையில் ஏமாந்த விக்னேஷின் வேதனை.

0
666
Vignesh
- Advertisement -

இரிடியம் மோசடி கும்பலிடம் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் இழந்தது பிரபல நடிகர் விக்னேஷ் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக இருந்தவர் விக்னேஷ். இவர் சின்னதாயி என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறையத் தொடங்கிய உடன் இவர் படங்களில் துணை கதாபாத்திரங்களிலும், சின்னத்திரை சீரியல்களிலும் நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் சொந்தமாக ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் நடிகர் விக்னேஷ் அவர்கள் இரிடியம் மோசடி கும்பலிடம் ஒன்றரை கோடிக்கு மேல் ஏமாந்து இருக்கும் தகவல் சமீபத்தில் சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சையை கிளப்பியது.

-விளம்பரம்-

இதில் மிக பிரபலமான பல தொழிலதிபர்கள் கூட கோடிக்கணக்கில் ஏமாந்து இருக்கிறார்கள். இது வாடிக்கையாகவே நிகழ்ந்து வருகிறது. தற்போது நடிகர் விக்னேஷ் இரிடியம் மோசடி கும்பலிடம் 1.81 கோடி ரூபாய் இழந்து விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பது, எனது கடையில் வாடகைக்கு இருப்பவர் ராம் பிரபு. இவர் எப்போதும் சைரன் வைத்த வாகனத்தில் துப்பாக்கி ஏந்தி, சபாரி உடை அணிந்த வீரர்களுடன் தான் வலம் வருவார். அதனால் நான் இவரை பார்த்து விஐபி என்றே நினைத்தேன். பின் இவருடன் நட்பு ரீதியாக பழகும் வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது.

இதையும் பாருங்க : இந்த பாடலை மிஸ் பண்ணினால் நீ ரொம்ப வருத்தப்படுவ – இளையரஜா பேச்சை கேட்டதால் இளம் வயதிலேயே சித்ராவிற்கு கிடைத்த தேசிய விருது.

- Advertisement -

போலீசில் புகார் அளித்த விக்னேஷ்:

அப்போது அவரிடம் இந்த பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக விசாரித்தேன். அதற்கு அவர், இரிடியம் என்ற பொருள் தனக்கு கிடைத்ததாகவும், மத்திய அரசுடன் இணைந்து ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்ததாகவும் கூறினார். அதன் மதிப்பு 3 லட்சம் கோடி என்றும் அதனால் தான் தனக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வீரர்களை மத்திய அரசு வழங்கி இருப்பதாகவும் சொன்னார். அதில் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி மற்றும் முக்கிய பிரமுகர்கள் இருக்கிறார்கள். இதில் என்னை சேர சொல்லி நம்பிக்கையூட்டும் வகையில் ராம் பிரபு பேசினார். அவரின் பேச்சை நம்பி என்னுடைய வங்கி கணக்கு மூலமாகவும், நண்பர்களிடம் கடனாக பெற்றும் 1.81 கோடி ரூபாயை அவரிடம் கொடுத்தேன்.

இருடியதால் இந்த நடிகர்:

ஆனால், அதற்கு பிறகு அவர் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். பின் அவர் ஏமாற்றுகாரர் என்பது தெரிந்தது. இது எனக்கு மட்டும் இல்லை என்னை போல நிறைய பேரிடம் பேசி ஏமாற்றி பணம் வசூலித்து இருப்பது தெரியவந்தது என்று கூறி இருந்தார். இதனை அடுத்து விருதுநகர் காவல்துறை ராம் பிரபுவை கைது செய்து சிறையில் அடைத்தது. இப்படி பிரபல நடிகர் இரிடியம் மோசடியில் ஏமாந்து இருந்த தகவல் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் இருடியம் பிரச்சனை தொடர்பாக நடிகர் விக்னேஷ் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, இருடியம் பிரச்சினை தெரிந்ததில் இருந்து மக்கள் அனைவரும் என்னை பணத்தாசைகாரன், பேராசை கொண்டவன் என்றெல்லாம் விமர்சித்து பேசி வருகிறார்கள்.

-விளம்பரம்-

விக்னேஷ் அளித்த பேட்டி:

உண்மையில் நடந்தது என்ன என்பது பலருக்கும் தெரியாது. அதற்காகத்தான் நான் இந்த பேட்டி அளித்து இருக்கிறேன். ராம் பிரபு என்பவர் மிகப்பெரிய ஏமாற்றுக்காரர். இவர் முதலில் என்னிடம் நட்பாக தான் பழகினார். அப்போது ஒருநாள் அவர் ஆஸ்திரேலியாவிலிருந்து ராணுவத்திற்காக ஒரு பொருள் வந்திருக்கிறது. அது பல கோடிக்கணக்கில் போகும். அதற்காக நீங்கள் ஒரு வங்கிகணக்கு ஓபன் பண்ண வேண்டும் என்றெல்லாம் கூறினார். நான் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன். பின் ராணுவ அதிகாரி கர்னல், சயின்டிஸ்ட் எல்லோரும் சேர்ந்து ராணுவத்திற்காக ஆஸ்திரேலியாவில் இருந்து பணம் வருவதாகவும் அதை மக்களுக்காகத்தான் செலவு செய்வதாகவும் மீட்டிங் போட்டு இருந்தார்கள்.

விவகாரத்தில் விக்னேஷ் ஏமறா காரணம்:

அதற்கு என்னையும் ராம் பிரபு அழைத்துச் சென்றார். நான் மட்டுமில்லை அங்கு பல பேர் சென்றிருந்தார்கள். அதை பார்ப்பதற்கு அப்படியே நம்புவது போல் தான் இருந்தது. அப்படித்தான் நான் நம்பினேன். ஆரம்பத்தில் எனக்கு அது இருடியம் என்று தெரியாது. ஒரு ராணுவ சம்பந்தப்பட்ட பொருள் என்று தான் நினைத்தேன். இரண்டரை வருடங்களுக்கு பிறகுதான் அது இரிடியம் என்று எனக்கு தெரிந்தது. அவர் என்னிடம் கொஞ்சம் கொஞ்சமாக 5 லட்சம் 10 லட்சம் என்று ஒன்றரை கோடி ரூபாய்க்கு மேல் வாங்கி விட்டார். நான் என் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி கொடுத்தேன். நான் மட்டுமல்ல என்னைப் போல் பல பேரிடம் அவர் ஏமாற்றி பணம் வாங்கியிருக்கிறார்.

விக்னேஷ் பேட்டி அளிக்க காரணம்:

மக்கள் என்னை விமர்சித்தும், பணக்காரன் என்று சொல்கிறார்கள். உழைத்து வருவது தான் நம்மிடம் இருக்கும் என்பது தெரியும். நானும் உழைத்து சம்பாதித்து ஒன்று போட்டு இன்னொன்று எடுக்கும் நோக்கத்தில் நான் பணம் கொடுக்கவில்லை. ராணுவம் சம்பந்தப்பட்டது என்பதனால் தான் நான் பணம் கொடுத்தேன். பின் புலிவால் பிடித்த கணக்கு மாதிரி ஆகிவிட்டது. தற்போது நான் பேட்டி அளிப்பதற்கு காரணமே இனிமேல் பெண்களும், மக்களும் இதை நம்பி ஏமாறாதீர்கள். அவர்களுக்கான ஒரு விழிப்புணர்வாக தான் நான் பகிரங்கமாக புகார் அளித்தும் பேட்டி அளித்து உள்ளேன் என்று கூறி இருக்கிறார்.

Advertisement