இன்னும் படம் முழுசாகூட எடுக்கல, அதுக்குள்ள விஜய் 62 பட ரிலீஸிற்கு வந்த சோதனை

0
954
vijay and murugadoss
- Advertisement -

இளையதளபதி விஜய் படம் என்றாலே ரிலீசுக்கு முன்னர் கண்டிப்பாக ஏதாவது பிரச்சனை வரும்.சமீபத்தில் வந்த மெர்சல் படம் கூட ரிலீஸான் பிறகு ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்தது.

vijay-62-poojai

விஜய் 62 -படம்,இதனால் இனி வரும் விஜய் படங்கள் எந்த வித பிரச்சனைகளையும் சந்திக்காமல் இருக்கவேண்டும் என்று நடிகர் விஜய் உறுதியாக உள்ளார். தற்போது இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் கத்தி படத்திற்கு பிறகு விஜயை வைத்து தற்போது விஜய் -62 படத்தை எடுத்து வருகிறார். இந்த படம் வரும் தீபாவளி அன்று வெளியிட வேண்டும் என்று படபிடிப்புகளை மிகவும் மும்மரமாக நடத்தி வந்தனர்.

- Advertisement -

2.0 ஆல் புதிய பிரச்சனை,இந்த நிலையில் படத்தை தீபாவளி அன்று படத்தை ரீலிஸ் செய்ய தற்போது படக்குழுவினர் யோசித்து வருகின்றனர். இதற்க்கு காரணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படம் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவு செய்த நாட்களுக்குள் முடிந்து தற்போது க்ராபிக்ஸ் காட்சிகளுக்கான பணிகள் மும்மரமாக நடந்து வருகிறதாம். இதனால் 2.0 வரும் தீபாவளி அன்று வெளியாவது உறுதி என்று தகவல்கள் வந்துள்ளதால் விஜயின் 62 வது படம் தீபாவளி அன்று வெளியாகும் வாய்ப்பு மிகுவும் குறைவு என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

vijay

ரசிகர்கள் வருத்தம்,பொதுவாக திருவிழா நாட்கள் காலத்தில் தனது தளபதி விஜயின் படங்களை பார்க்க விரும்பும் ரசிகர்கள் தற்போது தீபாவளி அன்று விஜயின் படம் வெளியாக போவதில்லை என்று அறிந்ததும் மிகுந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

Advertisement