-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சப்ரைஸ்- வெளியான அதிரடி அப்டேட்

0
368

விஜயின் பிறந்தநாளுக்கு ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்கு பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்திருக்கிறது. இவருக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் விஜய்க்கு வருகிற ஜூன் 22-ஆம் தேதி 50 ஆவது பிறந்த நாள். இதை கொண்டாட ரசிகர்கள் பலருமே ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அரசியலுக்கு வந்த பிறகு இதுதான் விஜய் உடைய முதல் பிறந்தநாள். இதனால் இதை சிறப்பாகவும், கோலாகலமாகவும் கொண்டாட பல திட்டங்களை நிர்வாகிகளும், ரசிகர்களும் போட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த வாரத்தில் இருந்தே விஜயின் பெயரில் சோசியல் மீடியாவில் ஹாஸ்டேக் உருவாக்கப்பட்டு ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

விஜய் பிறந்தநாள்:

மேலும், விஜயின் பிறந்த நாளை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ஐந்து திரைப்படங்களை ஜூன் 21-ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த வகையில் பகவதி, போக்கிரி, துப்பாக்கி, மாஸ்டர், அழகிய தமிழ் மகன் ஆகிய ஐந்து படங்கள் தான் வெளியாக இருக்கிறது. இதில் மாஸ்டர் படத்தை உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். ஏற்கனவே விஜயின் கில்லி படம் சமீபத்தில் தான் ரீ ரிலீஸ் செய்யப்பட்டிருந்தது.

விஜய் படங்கள்:

-விளம்பரம்-

இதுவரை எந்த முன்னணி நடிகர்களின் படமும் செய்யாத அளவிற்கு வசூல் சாதனையை கில்லி செய்திருந்தது. குறிப்பாக, 2கே கிட்ஸ்கள் மத்தியில் கில்லி படம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு இருந்தது. வரும் நாட்களில் விஜய்யின் ஐந்து படங்கள் ரீ ரிலீஸ் ஆக இருப்பதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதைத் தொடர்ந்து விஜய் பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ட்ரெண்டிங் ஆக்கி வருகிறார்கள்.

-விளம்பரம்-

விஜய் ரசிகர்களுக்கு சப்ரைஸ்:

இப்படி இருக்கும் நிலையில் விஜயின் பிறந்தநாளின் போது கோட் படத்தினுடைய டீசர் அல்லது இரண்டாவது சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. அதோடு கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் 12-ஆம் மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களை நேரில் சந்தித்து விஜய் பரிசளித்து இருந்தார். அந்த வகையில் இந்த ஆண்டுமே 10 ஆம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசளிப்பதற்காக ஏற்பாடுகளை கட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றது.

மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா:

மேலும், வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, விரைவில் நாம் சந்திப்போம் என்று விஜய் சோசியல் மீடியாவில் கூறி இருக்கிறார். அந்த வகையில் இந்த மாதம் 28-ஆம் தேதி, ஜூலை 3 ஆம் தேதி ஆகிய இரண்டு கட்டங்களில் விஜய் மாணவர்களை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகளும் தற்போது தீவிரமடைந்து கொண்டிருக்கின்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் கோட் படத்தில் விஜய் நடித்திருக்கிறார். மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாக்கப்பட்டு வரும் இந்த கோட் படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கிறது.

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news