தன் பிறந்தநாளுக்கு விஜய் இப்படி ஒரு விஷயம் செய்தாரா..! நல்ல மனுஷன்யா இவரு..?

0
562
vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வரும் விஜய், பல ரசிகர்களை கொண்ட ஒரு மாபெரும் சினிமா நட்சத்திரமாக இருந்து வருகிறார். நடிகர் விஜய் இந்த மாதம் 22 ஆம் தேதி 44 வது பிறந்த நாளை நெருங்குகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் கொண்டாட ஆயுதமாகியுள்ள நிலையில், விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட போவது இல்லை என்ற விடயம் அவர்களது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

vijay

சமீப காலமாக நடிகர் விஜய் பல்வேறு மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். நீட் பிரச்சினையில் அனிதா என்ற மாணவியின் குடும்பாத்திற்க்கு உதவியதை தொடங்கி சமீபத்தில் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்க பட்ட குடும்பத்தை நேரில் சந்தித்து 1 லட்ச ரூபாய் உதவி தொகை அளித்தது வரை, விஜய்யின் செயல்பாடுகளை அனைவருமே பாராட்டி வருகின்றனர்.

ஒரு சிலர் இவர் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக தான் இது போன்ற உதவிகளை செய்து வருகிறார் என்று கூறிவருகின்றனர். ஆனால், சமீபத்தில் விஜய் செய்த எந்த ஒரு உதவிகளும் விளம்பரம் இல்லாமலும், ஆடம்பரம் இல்லாமலும் தான் இருக்கிறது. அவர் செய்யும் இந்த உதவிகளில் அரசியல் ஆதாயம் இருப்பது போன்று தெரிவில்லை என்று ஒரு சில தரப்பினரும் கூறிவருகின்றனர்.

vijay 3

இந்நிலையில் தூத்துக்குடியில் உயிரிழந்த மக்களை எண்ணி தமிழகமே இன்னும் சோகத்தில் தான் இருக்கிறது. இதனால் விஜய் இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட போவதில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போதே விஜய் ரசிகர்கள் விஜயின் பிறந்தநாளை கொண்டாட பல ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்துள்ளது.