வீட்டை வாங்கியது பயமாக இருக்கிறது. கோடியில் வாங்கிவிட்டு புலம்பும் விஜய் தேவர்கொண்டா.

0
9710
vijay-devarkonda
- Advertisement -

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது விஜய் தேவரகொண்டா அவர்கள் புதியதாக ஒரு வீட்டை வாங்கி உள்ளாராம். மேலும், அந்த வீடு பார்ப்பதற்கே பயமாக உள்ளது என்றும் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப் படமான ‘நுவ்விலா’ என்ற படத்தின் மூலம் தான் விஜய் தேவரகொண்டா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

-விளம்பரம்-
vjd

- Advertisement -

இந்நிலையில் இவர் தற்போது ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் மிகப் பெரிய வீடு ஒன்றை வாங்கி உள்ளார் என்ற தகவல் வந்து உள்ளது. மேலும் இந்த வீட்டின் மதிப்பு சுமார் 15 கோடிக்கு மேல் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. மேலும்,நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் தான் வாங்கிய புது வீடு குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். அது என்னவென்றால் “மிகப் பெரிய வீட்டை வாங்கி விட்டேன். ஆனால், அது பார்க்க பயமாக இருக்கிறது. மேலும், அந்த பயத்தைப் போக்க எனது அம்மா தேவைப்படுகிறார்” என்று தெரிவித்து உள்ளார்.

இதையும் பாருங்க : முகெனுக்கு முன்னர் அபிராமி இவரை தான் காதலித்தாராம். என்னடா லிஸ்ட்டா போது என்று புலம்பும் ரசிகர்கள்.

2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் காதல், நகைச்சுவை படமாக “பெல்லி சூப்புலு” படம் வந்தது. மேலும்,இந்த படம் அந்த வருடம் வந்த பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக இருந்தது. மேலும்,இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா உலகில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். ஆனால், இவர் மக்களிடையே இவ்வளவு பிரபலம் ஆனது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த “கீதா கோவிந்தம்” என்ற படத்தில் தான். மேலும்,இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

-விளம்பரம்-
Image result for vijay devarakonda new house"

அதுமட்டும் இல்லாமல் தென்னிந்திய சினிமா உலகில் தனக்கென ஒரு ரசிகர் படையையும் சேர்ந்தார் என்றும் சொல்லலாம். மேலும்,தெலுங்கு சினிமா உலகில் இவரை ‘ரவுடி’ என்று தான் செல்லமாக அழைக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தில் நடித்து மாஸ் காட்டி உள்ளார். மேலும், இந்த படம் தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டும் வருகின்றது. இதனை தொடர்ந்து இவர் ‘டியர் காம்ரேட்’ என்ற படத்தில் நடித்து உள்ளார். மேலும்,இந்த படம் சூப்பர் ஹிட் கொடுத்தது என்றும் சொல்லலாம். மேலும், இந்த படத்தை நான்கு மொழிகளில் வெளியிட்டார்கள். மேலும், இவர் தமிழில் ‘நோட்டா’ என்ற படத்தில் நடித்து உள்ளார். இந்த படமும் தமிழக மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றது. இவர் தெலுங்கு படத்தில் நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதிலும் அதிக இடம் பிடித்து உள்ளார்.

Image result for vijay devarakonda new house"

இப்படி நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமானர். தற்போது கூட நடிகர் விஜய் தேவரகொண்டா அவர்கள் பல படங்களில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டின் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா பெயரும் இடம் பெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இவர் தற்போது “வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் மற்றும் ஹீரோ” போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement