இன்ஸ்டாவில் நுழைந்த சில மணி நேரத்தில் உலக அளவிலான சாதனையில் இடம் பிடித்த விஜய் – என்ன தெரியுமா ?

0
647
Vijay
- Advertisement -

இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கிய சில மணி நேரத்தில் நடிகர் விஜய் உலக அளவிலான சாதனை ஒன்றில் மூன்றாம் இடத்தை பிடித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் வெறும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய் இவரது நடிப்பில் வெளியான பல்வேறு படங்கள் சூப்பர் சூப்பர் ஹிட் அடித்து இருக்கிறது. அதேபோல இவரது நடிப்பில் வெளியான .சுமாரான படங்கள் கூட வசூல் ரீதியாக மாபெரும் கலெக்ஷன்களை ஏற்படுத்தி இருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இவருக்கு இருக்கும் லட்சக்கணக்கான வெறித்தனமான ரசிகர்கள் தான்.

-விளம்பரம்-

விஜய்க்கு ஏற்கனவே பேஸ்புக் மற்றும் ட்விட்டரில் கணக்கு இருக்கிறது. இந்த இரண்டிலும் லட்சக்கணக்கான பேர் பின் தொடர்ந்து வருகிறார்கள். அதே போல சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது விஜய் பதிவிடும் புகைப்படங்கள் எந்த வகையிலாவது சாதனை படைதது விடும். மாஸ்டர் படத்தின் போது நெய்வேலியில் விஜய் எடுத்த selfie பெரும் வைரலானது. அதோடு இந்த selfie அந்த ஆண்டு அதிகம் லைக் செய்யப்பட்ட புகைப்படங்கள் பட்டியலில் டாப் 10 இடத்தை பிடித்தது.

- Advertisement -

இப்படி ஒரு நிலையில் நடிகர் விஜய் இன்று இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கி இருக்கிறார். மேலும் லியோ லுக்கில் இருக்கும் புகைப்படம் ஒன்றை தன்னுடைய முதல் பதிவாக போட்டு இருக்கிறார் விஜய். மேலும் இந்த கணக்கு துவங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் ஒரு மில்லியன் மாணவர்களை கடந்தது. இதன் மூலம் இன்ஸ்டாகிராமில் அதி விரைவாக ஒரு மில்லியன் மாணவர்களை பெற்ற பிரபலம் என்ற பட்டியலில் நடிகர் விஜய் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

இன்ஸ்டாகிராமில் உலக அளவில் அதி விரைவாக ஒரு மில்லியன் மாணவர்களை பெற்ற பிரபலங்கள் பட்டியலில் பிரபல மியூசிக் குழுவான BTS இன்ஸ்டா பக்கம் 43 நிமிடத்தில் ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்று முதல் இடத்தை பிடித்தது. அதனைத் தொடர்ந்து ஏஞ்சலினா ஜூலி 59 நிமிடத்தில் ஒரு மில்லியன் பாலோவர்களை பெற்ற பிரபலம் என்று இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறார்.

-விளம்பரம்-

தற்போது இவர்களை தொடர்ந்து 99 நிமிடத்தில் ஒரு மில்லியன் பெற்று நடிகர் விஜய் இந்த ஸ்டில் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறார். தற்போது வரை இன்ஸ்டாகிராமில் விஜய்யை 2மில்லியன் பேர் பாலோ செய்து இருக்கின்றனர். இந்த எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்து சென்று கொண்டே இருக்கிறது. இதன் மூலம் இன்ஸ்டாவில் 24 மணி நேரத்தில் அதிக பாலோவர்கள் பெற்ற லிஸ்டிலும் வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே போல நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்து வருகிறார். மேலும், இந்த படத்தில் சஞ்சய் தத், மிஷ்கின், கௌதம் மேனன், அர்ஜுன், ப்ரியா ஆனந்த் என்று ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்ஸ்டா கணக்கை விஜய் துவங்கி இருப்பதால் இந்த படத்தின் அப்டேட் வரும் போதெல்லாம் விஜய் இன்ஸ்ட்டா பக்கத்தில்அடிஅக்கடி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement