நடிகர் விஜய் – முதல்வர் எடப்பாடி பழனிசாமி திடீர் சந்திப்பு!

0
2291
Vijay - Edappadi palanisamy

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படம் தீபாவளிக்கு வெளிவருவது தொடர்பாக பல சிக்கல்கள் நீடித்துக்கொண்டே இருக்கிறது. அந்த படத்தில் விலங்குகள் வரும் காட்சிகள் உள்ளதால் விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்றிதழ் வழங்கினால் மட்டுமே அந்த படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Vijayஇன்றுவரை விலங்குகள் நல வாரியத்திடமிருந்து தடையில்லா சான்றிதல் கிடைக்காததால் படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகர் விஜய் சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை சந்தித்து பேசி வருகிறார்.

இதையும் படிங்க: மீண்டும் விஜய்யுடன் இணையப்போகிறார் அட்லீ ..படத்தின் பெயரும் ரெடி!

இந்த சந்திப்பில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூவும் உடன் இருக்கிறார். இந்த சந்திப்பின் மூலம் மெர்சல் வெளியீட்டில் நீடித்து வரும் சிக்கல் தீர்ந்தால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.