இனி தளபதி இல்லை..! விஜய்க்கு புதிய பட்டப்பெயர் வைத்த பிரபல நடிகர்..! செம மாஸ்

0
234
vijay

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் முதல் பவர் ஸ்டார் என்று அணைத்து நடிகர்களுக்குமே அவர்களது பெயருக்கு முன்னாள் ஒரு பட்டம் இருக்கிறது. இதில் நடிகர் விஜய்க்கும் இளைய தளபதி என்ற பட்டம் பல ஆண்டுகளாக ஒரு அடையாளமாக இருந்து வருகிறது.

vijay-in-bairavaa

அவரது ரசிகர்கள் அவரை எப்போதும் தளபதி என்று தான் இத்தனை ஆண்டுகள் அழைத்து வரும் நிலையில் தற்போது பிரபல நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் விஜய்க்கு புதிய பட்டம் ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் பல்வேறு குணச்சித்திர கதாபாத்திரத்திலும், காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் டெல்லி கணேஷ்.

இதுவரை 400 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ள நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் விஜய்யுடன் “தமிழன், வேட்டைக்காரன்,காவலன் ” போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகர் டெல்லி கணேஷிடம், நடிகர் விஜய் பற்றி கேள்வி கேட்டபட்டது.

delhi ganesh

அப்போது பேசியுள்ள டெல்லி கணேஷ், அவர் கஷ்டப்பட்டு தான் சினிமாவில் வளர்ந்தார். முதலில் நடனம் மூலமாக மக்களை கவர்ந்து பின் நடிப்பு மூலம் கவர்ந்தார் . விஜய்,இளைய தளபதி என்பதை விட அவர் “மக்களின் நாயகன்” அவரது படங்களில் மக்களுக்கும், அவரது ரசிகர்களுக்கும் என்ன வேண்டுமோ அதை தான் காட்டுவர் என்று கூறியுள்ளார். நடிகர் டெல்லி கணேஷ், நடிகர் விஜயை மக்களின் நாயகன் என்று கொடுத்துள்ள பட்டமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துபோய்யுள்ளது.