அஜித்தின் மாஸ் படத்தை பாராட்டிய தளபதி விஜய் ! எந்த படம் தெரியுமா ? விவரம் உள்ளே

0
4386

தமிழ் சினிமாவில் எம்.ஜி. ஆர்-சிவாஜி, ரஜினி-கமல் என்ற வரிசைக்கு பிறகு இந்த தலைமுறையில் விஜய்-தான் என்று நாங்கள் சொல்லித் தெரியாத்தேவையில்லை.இவர்கள் இருவரின் படங்கள் வந்தாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.ஒரு காலகட்டத்தில் இவர்களின் இரு ரசிகர்களும் எந்த நடிகர் பெரியவர் என்று அடிக்கடி வார்த்தை மோதல்களை செய்ததுண்டு.

Veeram

ஆனால் ஒரு கால கட்டத்தில் விஜய் மற்றும் அஜித்தின் நட்பை கண்டு பின்னர் ரசிகர்களும் தல வேறு தளபதி என்ற வேறுபாட்டை சற்று மறந்தனர்.இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்னர் நடிகர் விஜய் அஜித் படத்தை பற்றி கருத்து தெரிவித்துள்ளார்.விஜய் மற்றும் அஜித்தின் ஒரு சில படங்கள் மட்டுமே ஒரு நாளில் வெளியாகியுள்ளது.அப்படி வெளியான கடைசி படம் தான் 2014 இல் வெளிவந்த ஜில்லா மற்றும் வீரம்.இந்த இரு படங்களும் அவரவர் ரசிகர்கள் பொறுத்தவரை இந்த படங்கள் மாபெரும் வெற்றி படமாக பேசப்பட்டது.

அப்போது ஜில்லா படத்தின் வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய் அஜித்தின் வீரம் படம் கூட நன்றாக உள்ளது என நான் கேள்விப்பட்டேன் அஜித்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று தெரிவித்திருந்தார்.

அஜித் மற்றும் விஜய் படங்களில் போட்டி இருந்தாலும் ஆனால் ஒரு சகநடிகராக தனது வாழ்த்துக்களை சொன்ன விஜயின் இந்த உள்ளத்திற்கு அஜித் ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.