அரசு மருத்துவமனை ,அரசு பேருந்து , ஆட்டோவில் போக காசில்லை ! விஜய்யின் கடந்தகால வாழ்க்கை

0
885
Actor vijay

இளையதளபதி விஜய் தமிழ் சினிமாவில் மிக பெரிய உச்சத்தில் இருக்கும் ஒரு நடிகர்.அவர் இந்த நிலைக்கு வர முக்கிய காரணம் அவரது கடின உழைப்பு மட்டுமே காரணம்.பலர் இவர் தந்தை நடிகரும் இயக்குனருமான சந்தரசேகர் ஒரு சினிமா பின்பலம் பிரபலம் என்பதால் தான் நடிகர் விஜய் மிகவும் சுலபமாக இந்த இடத்திற்கு வந்துவிட்டார் என்று கூறுகின்றனர்.

Vijay

ஆனால் உண்மை அதுவல்ல விஜயை பற்றிய வாழ்க்கை வரலாற்றையும் அவரது சினிமா வாழ்க்கை பற்றியும் புத்தகத்தை எழுதிய எழுத்தாளர் சபிதா ஜோசப் சமீபத்தில் பேட்டி ஒன்றில் நடிகர் விஜய் மற்றும் அவரது தந்தை சிறுவயதில் விஜய் அனுபவித்த கஷ்டத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் நடிகர் விஜய் எழும்பூர் பக்கத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் தான் பிறந்தார். அப்போது விஜயின் அப்பா சந்திரசேகரும் அம்மா ஷோபாவும் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவதற்காக ஒரு ஆட்டோவில் கூடவரமுடியாமல் பச்சிளம் குழந்தை விஜயுடன் பேருந்தில் தான் வீட்டிற்கு சென்றார்கள் என்ற பரிதாபமான சம்பவத்தை கூறியிருந்தார்.சிறு வயதிலேயே இப்படி கஷ்டப்பட்டதால் தான் என்னவோ இன்று அவர் நல்ல இடத்திற்கு சென்றவுடன் பலருக்கு பல உதவிகளை செய்துவருகிறார்.