விஜய்யின் பூர்வீக ஊர் மற்றும் வீடு குறித்த சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக மக்கள் மனதில் குடிகொண்டு இருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் கொடுத்திருக்கிறது. அதோடு இவருக்கு தமிழகத்தில் மட்டுமில்லாமல் உலகம் முழுவதுமே ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில் தளபதி விஜய்யின் பூர்வீக ஊர், வீடு குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எல்லோருக்குமே தளபதி விஜயின் பூர்வீகம் ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டி இருக்கும் பகுதியை சார்ந்தது என்று தெரியும். ஆனால், அதில் எந்த பகுதி என்று பலருக்கும் தெரியாது. ராமநாதபுரத்தில் இருக்கும் தங்கச்சி மடம் என்ற பகுதி தான் விஜயின் பூர்வீக ஊர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது.
விஜய்யின் பூர்விக ஊர்:
விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரின் நண்பர் வீடு தங்கச்சி மடத்தில் இருக்கிறது. இங்கு அவர் இரண்டு மூன்று நாட்கள் தங்கி செல்வாராம். ராமநாதபுரத்தில் இருக்கும் பெரியபட்டணம் என்ற ஊரில் முத்துப்பேட்டை என்ற கிராமம் தான் அவருடைய பூர்வீக ஊர். தங்கச்சி மடம் என்பது எஸ்.ஏ.சந்திரசேகரனின் அப்பா ரயில்வே துறையில் வேலை செய்த இடம். இது மட்டும் இல்லை விஜயின் பூர்வீக வீடும் இருக்கிறது. முத்துப்பேட்டை கடற்கரையில் இருந்து 300 மீட்டர் தொலைவில் தான் அந்த வீடு இருக்கிறது.
விஜய் தாத்தா குறித்த தகவல்:
அந்த வீட்டில் இருந்து சில மைல் தொலைவில் விஜயின் தாத்தா கல்லறையும் இருக்கிறது. இந்த கல்லறைக்கு விஜயின் அப்பா எஸ்.ஏ .சந்திரசேகர் வந்து செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். மேலும், விஜய் அப்பா சந்திரசேகர் தன்னுடைய படிப்பை முடித்தவுடன் சென்னைக்கு வந்து அங்கு சினிமா துறையில் பிரபலமான இயக்குனர் ஆகி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார். இருந்தாலும் தன்னுடைய தந்தையின் கல்லறைக்கு அவ்வப்போது வந்து செல்கிறார்.
‘கோட் ‘படம்:
இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த ‘லியோ’ படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்து மட்டும் இல்லாமல் திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி இருந்தார்கள். லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய்யின் ‘கோட்’ படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்தில் இணைந்திருக்கிறார். இதில் பல நட்சத்திரங்கள் நடித்து இருக்கிறார்கள்.
விஜய் அரசியல்:
இந்த படம் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இதை அடுத்து விஜய் அவர்கள் கடைசியாக ‘தளபதி 69’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். காரணம், இவர் முழு நேர அரசியலில் ஈடுபட இருப்பதால் சினிமாவில் இருந்து விலக இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு ஒன்றரை வருடங்கள் இருப்பதால் விஜய் தன்னுடைய கட்சிப் பணியில் தீவிரமாக செயல்பட்டு இருக்கிறார்.