மோகன்லாலுடன் சேர்ந்து உணவு சாப்பிட நடிகர் விஜய் மறுத்து இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் விஜய். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே சூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. மேலும், இவருடைய நடிப்பிற்கு மட்டுமில்லாமல் நடனம், ஆக்ஷனுக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது.
இது ஒரு பக்கம் இருக்க, இன்னும் சில தினங்களில் விஜயின் பிறந்தநாள் வருவதால் நிர்வாகிகள், ரசிகர்கள் பலருமே ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறார்கள். அதோடு இது விஜயின் ஐம்பதாவது பிறந்த நாள் என்பதால் கோலாகலமாக கொண்டாட திட்டமிட்டு வருகிறார்கள். இதனால் சோசியல் மீடியாவில் விஜய் குறித்த செய்திகள் அதிகமாக வைரலாகப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோகன்லால் உணவு சாப்பிட கூப்பிட்டும் விஜய் வராமல் மறுத்திருக்கும் சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜோ மல்லூரி பேட்டி:
இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் நடிகர் ஜோ மல்லூரி, ஜில்லா படத்தில் விஜய், மோகன்லால் இருவருமே சேர்ந்து நடித்திருந்தார்கள். அப்போது விஜய் தன்னுடைய வீட்டிற்கு மோகன்லால் மற்றும் அவருடைய மனைவியை சாப்பிட அழைத்திருந்தார். என்னையும் சாப்பிட வர சொல்லி அழைத்திருந்தார். இரவு ஒரு 7:00 மணி இருக்கும். நாங்கள் மூவருமே விஜய் வீட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு விஜய் உடைய மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் எங்களை அன்பாக வரவேற்றார்கள்.
விஜய் செய்த வேலை:
பின் உணவு பரிமாற இலைகளை போட்டு எங்களை சாப்பிட சொன்னார்கள். அப்போது என்னை பார்த்து மோகன்லால், விஜய் சாப்பிடலையா? என்று கேட்டார். அதற்கு பின் விஜய் பார்த்து, உட்காருங்கள். சாப்பிடுங்க விஜய், சாப்பிடுங்க விஜய் என்று மூன்று முறைக்கு மேல் மோகன்லால் சொல்லிக் கொண்டிருந்தார். அப்படி அவர் சொன்னது எனக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது. காரணம், பெரிய லெஜண்ட் சொல்லியும் விஜய் வரவில்லை.
விஜய் மீது கோபம்:
விஜய் எங்களுக்கு உணவு மட்டும் தான் பரிமாறி இருந்தார். நானும் அவரை உட்காந்து சாப்பிட சொன்னேன். ஆனால், விஜய் சாப்பிடவே இல்லை. இதனால் எனக்கு கொஞ்சம் வருத்தம். அடுத்த நாள் சூட்டிங் போது கேரவன் வெளியே விஜய் நின்று கொண்டு இருந்தார். அவர் என்னை பார்த்த உடனே நான் முகத்தை திருப்பிக் கொண்டேன். நான் கோபத்தில் இருந்தது அவருக்கு புரிந்தது. பின் என்னை கேரவனுக்குள் அழைத்தார். அப்போது நான், இவ்ளோ பெரிய மனுஷன் சாப்பிடு விஜய் என்று அத்தனை முறை சொல்கிறார்.
விஜய் கொடுத்த விளக்கம்:
அப்படியே சிரித்துக்கொண்டே நீங்கள் விட்டுட்டீங்க. அது என்ன எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு என்று சொன்னேன். அதற்கு விஜய், அண்ணே! எனக்கு எங்க அம்மா, அப்பா ஒரு பழக்கம் கற்றுக் கொடுத்திருக்கிறார்கள். வீட்டுக்கு வந்த எந்த ஒரு விருந்தாளி சாப்பிட்ட பிறகு தான் நீ சாப்பிடணும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால் தான் உங்களை கவனித்து அனுப்பிய பிறகு நான் சாப்பிட்டேன். அதுதான் நல்ல பழக்கம் என்று கூறியிருந்தார்.