தளபதி விஜய் நடிக்க மறுத்த படத்தில்..பணம் வாங்காமல் நடிக்க ஓகே சொன்ன விஜய் சேதுபதி

0
1238
vijay sethupathi

சினிமாவில் நடிகர் விஜய் ஒரு பெரிய இடத்திற்கு வருவதற்கு அவரது தந்தை எஸ். ஏ. சி. சேகரும் ஒரு முக்கிய காரணம்.சிறு வயது முதலே அவரை ஒரு நல்ல நடிகனாக உருவாக்கியவர்,தனது தந்தை இயக்கத்தில் விஜய் பல படங்களில் நடித்துள்ளார்.சில ஆண்டுகள் கழித்து திரைப்படங்களில் நடிக்கத்துவங்கிய எஸ். ஏ. சி. சேகர் , தற்போது தன்னிடம் உதவி இயக்குனராக இருந்த விக்கி இயக்கி வரும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் வரலாற்ரை போற்றும் படத்தில் நடித்து வருகிறார்.

Traffic-Ramaswamy

இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் விஜய் சேதுபதி சில நாட்களுக்கு முன்னர் ஒப்பந்தமாகியுள்ளார்.ஆனால் அந்த கதாப்பாத்திரத்தில் முதலில் தனது மகன் விஜயை அனுகியுள்ளார் எஸ். ஏ. சி. சேகர். ஆனால், இந்த படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதால் தான் பின்னர் விஜய் சேதுபதியை அணுகியுள்ளார்.

மேலும் இந்த படத்திற்காக சம்பளமே வாங்காமல் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி.இந்த படத்தில் எஸ். ஏ. சி. சேகரின் மனைவியாக நடிகை ரோகினி நடித்துள்ளார்.மேலும் படத்தில் விஜய் ஆன்டனி, பிரகாஷ் ராஜ், குஷ்பு போன்ற பிரபலங்களும் நடித்துள்ளனர்.