அஜித் ஸ்டைலில் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் விஜய்..!சர்கார் பிரபலம் சொன்ன தகவல்..!

0
332
Sarkar

சால்ட் அண்ட் பேப்பர் லுக் என்றதும் நம் நினைவில் முதலில் வருவது நடிகர் அஜித் தான். ஆனால், நடிகர் விஜய் ஒரு சில படங்களில் லேசான வெள்ளை முடி கெட்டப்பில் தோன்றியுள்ளார். ஆனால், சர்கார் படத்தில் நடிகர் விஐய் ஒரு சூப்பரான சால்ட் அண்ட் பேப்பர் ஹேர் ஸ்டைலில் வருகிறாராம்.

Vaishali

நீண்ட நாட்களாக இந்த படத்தின் பல்வேறு தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சீரியல் நடிகை வைஷாலி தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் ஒன்று “ராஜா ராணி ” இதில் கதநாகனாக நடித்து வரும் கார்த்திக்கின் தங்கையாக நடித்து வந்தவர் சீரியல் நடிகை வைஷாலி. இவர் இதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மாப்பிளை சீரியலிலும் நடித்து வருகிறார்.

Vaishali

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை வைஷாலி, படத்தில் விஜயுடன் நடித்துள்ளது மிகுந்த மகழ்ச்சியளிக்கிறது. இந்த படத்தில் என்னுடைய நடிப்பை பார்த்த விஜய், நீங்கள் நன்றாக நடிகிறீர்கள் என்று பாராட்டினார்,இந்த படத்தில் அவரை சால்ட் அண்ட் பேப்பர் லுக்கில் பார்த்த போது நான் அசந்து விட்டேன். கண்டிப்பாக அஜித்திற்கு பிறகு சால்ட் அண்ட் பேப்பர் கெட் அப் விஐய்க்கு செட் ஆகும். விஜய்யின் ரசிகர்களுக்கும் இந்த கெட் அப் ரொம்ப பிடித்துப்போய்விடும் என்றுகூறியுள்ளார் .