கடிதம் எழுதிவைத்து ஓட்டம்.! 500 சம்பளம்..! விஜய்யின் யாரும் அறியாத மறுப்பக்கம்.! ஒரு சிறு தொகுப்பு.

0
264
vijay

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் ஒரு தவிர்க்கமுடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கிவருகிறார். என்னதான் அவரது தந்தை இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் ஆதரவால் சினிமாவில் நுழைந்தாலும் இன்று தனது கடின உழைப்பினால் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார் விஜய். நடிகர் விஜய்யின் பிரத்யேக தொகுப்பே இந்த பதிவு.

vijay actor

முதல் சம்பளம்:

நடிகர் விஜய் கதாநாயகனாக அறிமுகமானது ‘நாளைய தீர்ப்பு என்ற படம் தான் என்றாலும், அவர் அதற்கு மும்பு பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அவர் முதன் முதலில் 1984 ஆம் ஆண்டு ‘வெற்றி ‘என்ற படத்தில் நடித்தார். இதற்காக அவர் வாங்கிய சம்பளம் 500 ருபாய் மட்டும்தான்.

வீட்டை விட்டு ஓட்டம்:

சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் ஒரு முறை கடிதம் எழுதிவைத்து விட்டு எஸ்.கேப் ஆகிவிட்டார். பின்னர் அவரை எப்படியோ தேடிக் கண்டுப்பிடித்து வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

vijay

பிடித்த நிறம்:

விஜய்க்கு மிகவும் பிடித்த நிறம் கருப்பு தான். பெரும்பாலும் வெளியில் எங்கு சென்றாலும் கருப்பு உடையில் தான் செல்வார். அவரது மனைவி தான் அவரது ஆடைகளை தேர்வு செய்வார். மேலும், விஜய்க்கு கருப்பு பிடித்த நிறம் என்பதால் பெரும்பாலும் விஜய் நடிக்கும் படத்தின் முதல் பாடலில் அவர் கருப்பு நிற ஆடையில் நடனமாடியிருப்பார். .

அதிக புதுமுக இயக்குனருக்கு வாய்ப்பு:

விஜய்க்கு புதுமுக இயக்குனர்களுக்கு பல வாய்ப்புகளை கொடுத்துள்ளார். இதுவரை 22 புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதுபோக தன்னை வைத்து படம் இயக்கி கஷ்டத்தில் இருந்த பல இயக்குனர்களுக்கு தலா 5 லட்சம் கொடுத்து உதவினார்.

அஜித்,விஜய் நட்பு:

விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சிலர் தான் எப்போதும் தல தளபதி விவாதத்தில் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், உண்மையில் விஜய் மற்றும் அஜித் இருவரும் நல்ல நபர்கள். அதுபோக விஜய் குடும்பத்தினரும் அஜித் குடும்பத்தினரும் அவ்வப்போது வெளியே சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.