மெர்சல் பட சர்ச்சைக்கு முதல் முறையாக பதிலடி கொடுத்த தளபதி விஜய் !

0
5569
mersal movie
- Advertisement -

இளையதளபதி விஜய் நடித்த மெர்சல் படம் வெளியான போது பல விமர்சங்களை பெற்றது. ஒரு சில அரசியல் கட்சிகள் இந்த படத்தை தடை செய்யகோரி கருத்துக்கள் வெளியிட இந்த படம் மேலும் வெற்றியை பெற்றுத்தந்தது.

Mersal

சுமார் 120 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்த படம் எதிர்பார்த்ததை விட 250 கோடி வரை வசூல் சாதனை படைத்தது.மேலும் சில நாட்களுக்கு முன்னர் லண்டனில் நடந்த திரைப்பட விழாவில் சிறந்த வெளிநாட்டு படம் என்ற விருதினையும் பெற்றது.இருப்பினும் ஒரு சில
தயரிப்பாளர்களும்,சினிமா பிரபலங்களும் இந்த படத்தை தோல்வி படமென்று கூறி வருகின்றனர்.

- Advertisement -

ஆனால் மெர்சல் படத்தை வெளியிட்ட திரையரங்க உரிமையாளர்களும்,விநியோகஸ்தர்கம் மெர்சல் படம் தோல்வியை முழுவதுமாக மறுத்துள்ளனர். மேலும் மெர்சல் படம் பெற்றுத்தந்த லாபத்தை விட சமீப காலமாக வெளிவந்த எந்த ஒரு படமும் பெற்றுதந்ததில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

Mersal

இதையடுத்து மெர்சல் படத்தின் படக்குழுவினர் மற்றும் ரசிகர்கள் இந்த கூட்றினை முழுவதுமாக மறுத்து வருகின்றனர்.மேலும் மெர்சல் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதத்தில் விரைவில் சென்னை இ. சி. ஆரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் சிறப்பு விருந்தை ஒன்றை வைத்து கொண்டாட உள்ளாராம்.மேலும் இந்த விழாவில் முக்கிய பிரபலங்கள் சிலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement