எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமலால் முடியாததை நிகழ்த்திய கேப்டன் – என்ன தெரியுமா ?

0
2560
VIJAYAKANTH
- Advertisement -

எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல் செய்ய முடியாத சாதனையை கேப்டன் விஜயகாந்த் செய்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்தவர் விஜயகாந்த். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் திரை உலகில் மட்டும் இல்லாமல் மக்கள் மத்தியிலும் இவர் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர். மேலும், ரஜினி, கமல், சரத்குமார்,பிரபு போன்ற பல நடிகர்களுக்கு டப் கொடுக்கும் அளவிற்கு தமிழ் சினிமா உலகில் முத்திரை பதித்து இருந்தவர் விஜய்காந்த்.

-விளம்பரம்-

இனிக்கும் இளமை என்ற படத்தின் மூலம் தமிழ் துறைக்கு அறிமுகமானவர் விஜயகாந்த். அதனை தொடர்ந்து இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. இன்று கேப்டனின் 70வது பிறந்தநாள். ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் விஜயகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி, கமலஹாசன், ரஜினி ஆகியோரின் நூறாவது படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. இருந்தும் தன்னுடைய நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் மூலம் விஜயகாந்த் மாபெரும் வெற்றி படைத்திருக்கிறார். தற்போது தமிழ் சினிமாவின் முன்ணனி நடிகர்களின் 100 பட பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

எம்ஜிஆர்:

நடிகராக திரை உலகில் அறிமுகமாகி முதலமைச்சராக மக்கள் மத்தியில் இடம் பிடித்தவர் மக்கள் திலகம் எம்ஜிஆர். இவருடைய நூறாவது படம் ஒளிவிளக்கு. மீனா குமாரி, தர்மேந்திரா உட்பட பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். இந்தியில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தின் ரீமேக் இது. இந்த படத்தில் சௌகார் ஜானகி, ஜெயலலிதா ஆகியோரும் நடித்திருந்தார்கள். ஆனால், இந்த படம் பெரிய அளவில் வணிக ரீதியாக வெற்றி அடையவில்லை.

-விளம்பரம்-

சிவாஜி கணேசன்:

நடிப்பிற்கு உதாரணமாக திகழ்ந்தவர் சிவாஜி கணேசன். இவருடைய நூறாவது படம் நவராத்திரி. ஒன்பது விதமான கெட்டப்புகளில் சிவாஜி பின்னி எடுத்திருப்பார். நடிகையர் திலகம் சாவித்திரியும் இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது. ஆனால், படம் வெளியான போது வசூல் ரீதியாக பெரிய அளவில் வெற்றி அடையவில்லை.

ரஜினிகாந்த்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டார் ஆக கலக்கிக் கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். இவருடைய நூறாவது திரைப்படம் ராகவேந்திரா. தன்னுடைய துள்ளலான நடிப்பை விடுத்து மாறுபட்ட கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதளவு வரவேற்பு பெறவில்லை.

கமல்ஹாசன்:

உலகநாயகனாக திகழ்ந்து கொண்டிருக்கிறார் கமலஹாசன். இவருடைய நூறாவது படம் ராஜபார்வை. இந்த படத்தில் இடம்பெற்ற அந்தி மாலை பொழிகிறது பாடல் எவர்கிரீன் பேவரட் என்றே சொல்லலாம். ஆனால், படம் தான் படுதோல்வி அடைந்தது. நடிகர் சத்யராஜ் நூறாவது படம் வாத்தியார் வீட்டு பிள்ளை, நடிகர் பிரபுவின் 100வது படம் ராஜகுமாரன். இந்த படங்கள் எல்லாமே தோல்வி அடைந்தது.

விஜயகாந்த்:

ஆனால், இதில் யாராலும் பறிக்க முடியாது எட்டாத கனியை பறித்து சாதனை படைத்திருக்கிறார் விஜயகாந்த். இவருடைய நூறாவது படம் கேப்டன் பிரபாகரன். இந்த படம் 1991 ஆம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் விஜயகாந்த்துக்கு என்று பாடலே கிடையாது. இயக்குனர் ஆர் கே செல்வமணி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படத்தின் பாடல்களும், பின்னணிசையும் வேற லெவல்ல இருக்கு. இந்த படம் 275 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது. கேப்டன் என்று அடையாளத்தை விஜயகாந்த் இந்த படம் தான் கொடுத்தது என்றே சொல்லலாம்.

Advertisement