விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாரா..? தேமுதிக வெளியிட்ட தகவல்.!

0
418
vijayakanth

தே மு தி க தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நல குறைபாட்டால் அவதி பட்டு வருகிறார். இதற்காக அடிக்கடி வெளிநாடு சென்று சிகிச்சை பெற்றும் வருகிறார். இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 31) நடிகர் விஜயகாந்த் அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை, மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விஜயகாந்தின் உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளது அதனால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்று பல செய்திகளும் சமூக ஊடகங்களில் பரவ தொடங்கின. ஆனால், இந்த செய்தி வதந்தி என்று பின்னர் தான் தெரியவந்தது.

விஜயகாந்த அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக உடல் நல குறைபாட்டால் சிகிச்சை பெற்றுவருவது உண்மை தான். அது போல தான் நேற்றும் ஒரு சாதாரண பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமீபத்தில் தே மு தி க சார்பில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத்தின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் இருக்கிறார். எனவே, வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.