சீயான் வீட்டில் விஷேஷம். ரசிகர்கள் குஷி. அப்படி என்னனு கேக்குறீங்களா ?

0
1531
Dhruv
- Advertisement -

தமிழ் சினிமாவில் சிவாஜி கமலுக்கு பின்னர் நடிப்பிற்கு ஒரு உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் அது விக்ரம் என்றே சொல்லலாம், தென்னிந்தியா சினிமா திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தான் விக்ரம். இவரை “சியான் விக்ரம்” என்றுதான் எல்லோரும் அழைப்பார்கள். இவருடைய இயற்பெயர் கென்னடி ஆகும்.ஆனால், சினிமா துறைக்கு வந்ததற்கு பிறகு விக்ரம் என்று மாற்றிக்கொண்டார். நடிப்பில் எந்த ஒரு முன் அனுபவமும் இல்லாமல் திரை உலகில் தன்னுடைய திறமையால் கால் தடம் பதித்துள்ளார்.

-விளம்பரம்-

இவரது தந்தையான ஜான் விக்டர் பரமக்குடியில் இருந்து சென்னைக்கு வந்து சினிமாவில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று நினைத்தார் ஆனால் இவருக்கு சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடிக்கவும் சீரியலில் நடிக்கத்தான் வாய்ப்பு கிடைத்தது இதனால் தனது மகன் விக்ரமை எப்படியாவது சினிமாவில் இந்த மாபெரும் நடிகர் ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் சிறு வயது முதலே அவருக்கு ராசிகள் நடனத்தையும் சினிமாவில் ஆடம்பரத்தையும் பயிற்சியளித்தார்.

- Advertisement -

அதன்பின்னர் விக்ரம் தனது கடின உழைப்பு மூலம் சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமானார். விக்ரம் ஒரு நடிகர் என்பதை விட கலைஞர் குடும்பத்திற்கு சம்மந்தியாவர். கடந்த அக்டோபர் மாதம் தான் விக்ரமின் மகள் பிரபல கெவின் கேர் நிறுனத்தின் உரிமையாளர் சி கே ரங்கநாதனின் மகன் அஸ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அஸ்வின், கலைஞர் கருணாநிதியின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் மகள் அக்ஷிதா மற்றும் கலைஞரின் பேரன் ரஞ்சித் ஆகிய இருவரின் நிறுவனம் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்றது. இந்த நிலையில் விக்ரம் மகள் தற்போது கர்ப்பமாக இருக்கிறாராம். எனவே, விக்ரம் விரைவில் தாத்தாவாக போகிறார்.கொரோனா பிரச்சனை காரணமாக இந்த விஷயத்தை மிகவும் எளிமையாக கொண்டாட இருக்கிறாராம் விக்ரம் என்று தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement