ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் சர்வைவர் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கின்றது. வெவ்வேறு குணாதிசியங்கள் நிறைந்த மனிதர்களை சவால்கள் நிறைந்த தீவில் போட்டியாளர்களை விட்டு அவர்களுக்கு கொடுக்கும் சவால்களை கடக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் சர்வைவர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்கள் களம் இறக்கி பல எலிமினேஷன்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. மேலும், நாட்கள் செல்ல செல்ல போட்டிகளும் சவால்களும் கடுமையாக சென்று கொண்டிருக்கின்றது.
இந்நிலையில் இன்றைக்கான சர்வைவர் நிகழ்ச்சி ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் விக்ராந்த் அவர்கள் தன்னுடைய அண்ணன் விஜய் குறித்து எமோஷனலாக சில விஷயங்களை பேசி உள்ளார். தளபதி விஜயின் தம்பியும், நடிகருமான விக்ராந்த் அவர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று உள்ளார். நடிகர் விக்ராந்த் அவர்கள் சர்வைவர் நிகழ்ச்சியில் நன்முறையில் விளையாடிக்கொண்டு வைக்கிறார். இந்த நிகழ்ச்சியின் மூலம் விக்ராந்துக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் விக்ராந்த் அவர்கள் கூறியிருப்பது, தளபதி விஜய் உடைய அப்பா அதாவது என்னுடைய பெரியப்பா இயக்குனராக இருந்தாலும், சினிமா உலகில் விஜய் அண்ணாவுக்கு வாய்ப்புகள் கிடைத்தாலும் ஆரம்பத்தில் அவரை குறித்து பல மோசமான விமர்சனங்கள் வந்தது. இருந்தாலும் தன்னைப்பற்றி தவறாக பேசியவர்கள் மத்தியில் திரும்பிப் பார்க்க வைக்கும் அளவிற்கு விஜய் அண்ணா பெரிய இடத்தில் இருக்கிறார். இவருடைய வாழ்க்கையை உதாரணமாக வைத்து பலரும் இருகிறார்கள். என்னுடைய அண்ணன் நினைத்து எனக்கு பெருமையாக இருக்கிறது.
அவர் நிறைய கஷ்டங்களையும், கடுமையான சவால்களையும் கடந்து தான் இந்த இடத்தில் இருக்கிறார். அவரை பற்றி தவறாக எழுதிய பத்திரிகையிலேயே அவருடைய வாழ்க்கை வரலாற்றை எழுத வைத்தார். அந்த அளவிற்கு அவர் தன்னுடைய வாழ்க்கையில் கடுமையாக போராடியவர் என்று விஜய் குறித்து எமோஷனலாக பல விஷயங்களை விக்ராந்த் பகிர்ந்து உள்ளார். தற்போது இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. மேலும், இதற்கு முன்னாடி கூட நிகழ்ச்சியில் விக்ராந்த் அவர்கள் விஜய் அண்ணனின் பெயரை பயன்படுத்தி ஒரு டிக்கெட் கூட வாங்கியது இல்லை என்றும் கூறியிருந்தார்.