படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க, நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?னு கேட்டேன் – எச். வினோத் குறித்து இயக்குனரின் பதிவு

0
1136
- Advertisement -

துணிவு படத்தின் போது வினோத்குமார் செய்த செயல் குறித்து அவருடைய நண்பர் பகிர்ந்திருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிக முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் ஒருவராக திகழ்ந்து வருபவர் இயக்குனர் எச் வினோத். இவர் இயக்கிய முதல் படம் சதுரங்க வேட்டை. அதன் பின் இவர் தீரன் அதிகாரம் ஒன்று போன்ற ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், வினோத்திற்கு மூன்றாவது படத்திலேயே அஜித்தை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

-விளம்பரம்-

பாலிவுட்டில் வெளியான பிங்க் திரைப்படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு வினோத் அவர்கள் அஜித்தை வைத்து வலிமை திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஆனால், இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது இருப்பினும் வசூல் ரீதியாக இந்த திரைப்படம் வெற்றி பெற்றது.

- Advertisement -

வினோத் இயக்கிய படம்:

அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து துணிவு படத்தை இயக்கி இருந்தார் எச் வினோத். மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, ஜி பி முத்து, அமீர், பாவனி, சிபி சக்கரவர்த்தி என பலர் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். அதுபோக படத்தில் எண்ணற்ற சின்னத்திரை பிரபலங்கள் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகி இருந்தது. இப்படம் வாங்கிக்கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

துணிவு படம்:

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தையும் வசூலையும் பெற்றிருந்தது. இதனை அடுத்து வினோத் குமார் கமலை வைத்து படம் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிலையில் வினோத்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரின் நண்பரும் இயக்குனருமான சரவணன் அவர்கள் சோசியல் மீடியாவில் பதிவு ஒன்று பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், அஜீத் சாரின் ‘துணிவு’ ரிலீஸான நேரம். இயக்குநர் வினோத்துடன் சபரிமலையில் இருந்தோம். நல்ல கூட்டம் என்பதால், அருகே ஓர் அறை எடுத்துத் தங்கினோம்.

-விளம்பரம்-

வினோத் நண்பர் பதிவு:

‘துணிவு’ படம் குறித்த ரிசல்ட் பாஸிடிவ்வாக வந்தாலும், விமர்சனம் குறித்து தெரிந்துகொள்ள அவ்வளவு ஆவல். சபரிமலையில் கவரேஜ் கிடைக்கவில்லை. ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் என கவரேஜ் தேடி ஓடிக்கொண்டு இருந்தோம். ‘படம் பக்கா…’ என விமர்சனங்கள் வர, அறைக்கு ஓடி வந்தேன். கையைத் தலையணை போல் வைத்துக்கொண்டு, கால் நீட்டித் தூங்கிக் கொண்டிருந்தார் வினோத். “யோவ் நீயெல்லாம் மனுஷனாய்யா…” என எழுப்பினேன். நல்ல உறக்கத்தில் இருந்த வினோத் சலித்தபடி நிமிர்ந்தார். “படத்தைக் கழுவிக் கழுவி ஊத்துறாங்க. நீங்க தூங்கிட்டு இருக்கீங்க?” “ஊத்தட்டும் விடுய்யா” என்றபடி மீண்டும் படுத்துக் கொண்டார்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்:

“ஐயோ, நண்பா… படம் சூப்பர்னு கொண்டாடுறாங்க…” என்றேன். “சரிய்யா…” – எழாமலே பதில் சொல்லித் தூக்கத்தைத் தொடர்ந்தார். ‘திங்க் மியூஸிக்’ சந்தோஷ் வந்து ஆளைப் புரட்ட, அப்போதும் வேண்டா வெறுப்பாகத்தான் எழுந்தார். “நாம செய்ய வேண்டிய வேலையைச் செஞ்சுட்டோம். படம் நல்லா இருந்தாலும் இல்லாட்டியும் இனி நம்மளால ஒண்ணும் பண்ண முடியாது. வாழ்த்தினாலும் வறுத்தாலும் ஏத்துக்கத்தான் வேணும்…” என்றார். அறிவில், தெளிவில் அப்படியோர் அரக்கன் வினோத். எவராலும் சலனப்படுத்த முடியாத சக்தி. ‘நல்லதும் கெட்டதும் நமக்குள்தான்’ என்று இயங்குகிற அபூர்வனுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.

Advertisement