தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் விமல். தற்போது விமல் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வடம். மாசாணி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர் ராஜசேகர் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்று இருந்தது. இதில் விமல், நட்டி உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது விழாவில் பேசிய விமல், இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். இமான் சார் இந்த படத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார்.

மதுரையில் மஞ்சுவிரட்டு நடக்கும் இடங்களில் எல்லாம் இந்த பாண்டி முனி பாடலை தான் ஒழிக்க விடுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த பாடல் பிரபலமாக இருக்கிறது. இந்த பாடல் இசையமைத்த இமானுக்கு ரொம்ப நன்றி. எனக்கு மாஸ் ஹீரோ எல்லாம் வேண்டாம். நல்ல மனசுள்ள ஹீரோவாக இருந்தால் போதும். காரணம் என் சக்தி என்ன என்று எனக்கு தெரியும். ஆண்டவன் என்னை இந்த அளவில் வைத்திருந்தால் போதும். நம்மை நம்பி பணம் போடும் தயாரிப்பாளர்களுக்கு ஒரு லெவலுக்கு லாபம் சம்பாதித்து கொடுத்தால் போதும்.
வடம் படம்:
இந்த படத்தோட ஹீரோயின் பெயர் சனாஷ்கா. இந்த பெயரை கூப்பிடும் போதெல்லாம் எனக்கு பெரிய டாஸ்காக இருக்கும். அவர் இந்த படத்தில் ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார். எனக்கும் பால சரவணனுக்கும் மாடு தான் பெரிய டாஸ்காக இருக்கும். அவர்கள் பெயர் பாண்டி முனி. அவர்கள் இன்று மஞ்சுவிரட்டில் கலந்து கொண்டிருப்பதால் இங்கு வர முடியவில்லை. தயாரிப்பாளர் பற்றி ஒரு உண்மை சம்பவத்தை பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன். ரோபோ சங்கர் மாமா இறந்தபோது குற்றாலத்தில் வடம் படத்தினுடைய படப்பிடிப்பி நடந்தது.

விமல் சொன்னது:
பெரிய பொருள் செலவில் அந்த படப்பிடிப்பு நடந்தது. முதல் நாள் இரவு தான் எனக்கு தகவல் சொன்னார்கள். நான் மெதுவாக இயக்குனரிடம் இதைப் பற்றி சொன்னேன். படப்பிடிப்பில் இருந்து செல்வதற்கு அனுமதி கொடுக்க மாட்டார்கள் என்று தெரியும். இருந்தாலும் நான் கேட்டுப் பார்ப்போம் என்று இயக்குனரிடம்
பேசினேன். இரவில் விமானம் மூலம் சென்னைக்கு சென்று காலையில் அவர் அஞ்சலி செலுத்திவிட்டு உடனடியாக விமானத்தில் ஏறி மதியத்திற்குள் படப்பிடிப்பிற்கு வந்து விடுகிறேன் என்று சொன்னேன்.
ஆயிரம் துணை நடிகர்கள், மக்கள், மாடு பிடி வீரர்கள், சிவகங்கையில் இருந்து ஏராளமான மாடுகள் வந்திருந்தது.
https://www.youtube.com/watch?v=csGPAxMnhp4
ரோபோ சங்கர் பற்றி சொன்னது:
கிட்டத்தட்ட 15 லட்சம் ரூபாய் பொருட் செலவில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. வேறு ஏதேனும் காட்சிகள் இருக்கிறதா? என்று கேட்டேன். இல்லை என்று இயக்குனர் சொல்லிவிட்டார். அதற்கு பிறகுதான் படபிடிப்பில் தொடர்ந்து கலந்து கொண்டேன். அடுத்த நாள் மாலையில் அனைவரையும் அழைத்து ரோபோ சங்கருக்கு கண்ணீர் அஞ்சலி உடன் பெரிய பிளக்ஸ் பேனரை வைத்து மௌன அஞ்சலி செலுத்தினார்.
அங்குள்ள கிராம மக்களுக்கு 500 புடவைகளை தானமாக வழங்கினார். அந்த ஏரியா முழுவதும் 2000 மரக்கன்றுகள் நட்டு அதை பதிவிட வைத்தார். நேரில் வந்து செலுத்த முடியாத அஞ்சலியை தயாரிப்பாளர் ராஜசேகர் இப்படி செய்து என் மனதை கவர்ந்து விட்டார். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.






