நடிகர் விமல் முதலில் திரையில் தோன்றியது இந்த விஜய் படத்தில் தான்.

0
4991
vimal
- Advertisement -

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகர்களில் விமலும் ஒருவர். இவர் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகனாக மக்கள் மக்கள் மத்தியில் அறியப்பட்டார். பொதுவாகவே இவருடைய படங்கள் அனைத்தும் குறைவான பட்ஜெட்டில் தான் இருக்கும். பசங்க படத்தை தொடர்ந்து இவர் களவாணி படத்தில் நடித்திருந்தார். இந்த களவாணி படத்தின் மூலம் இவருடைய சினிமா பயணம் வேற லெவலுக்கு சென்றது.

-விளம்பரம்-

இதனைத் தொடர்ந்து நடிகர் விமல் தூங்கா நகரம், வாகை சூடவா, கலகலப்பு, சில்லுன்னு ஒரு சந்திப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, மஞ்சப்பை, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, மாப்பிள்ளை சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவருடைய நடிப்பில் களவாணி 2 படம் வெளியாகி இருந்தது.

இதையும் பாருங்க : இந்தாங்க மணிரத்னத்தின் வாட்ஸ் அப் நம்பர். நீங்க கேள்வி கேளுங்க அவர் பதில் அளிப்பார். சுஹாசினி கொடுத்த சர்ப்ரைஸ்.

- Advertisement -

இந்நிலையில் நடிகர் விமல் முதன் முதலாக நடித்த படத்தின் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த படம் தான் கில்லி. இந்த படத்தில் விஜய், திரிஷா, பிரகாஷ்ராஜ் உள்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்த படம் வெளியாகி 16 வருடங்கள் ஆகியும் இன்றும் மக்கள் மத்தியில் நல்ல பேசப்பட்டு தான் வருகிறது. மேலும், நடிகர் விமல் அவர்கள் முதன் முதலாக தளபதி விஜயின் சூப்பர் ஹிட் படங்களில் ஒன்றான கில்லி படத்தில் நடித்திருந்தார். இந்த கில்லி படம் இவர் நடித்த முதல் படம். கில்லி படம் எத்தனையோ முறை டிவிகளில் ஒளிபரப்பாகிறது. ஆனால்,இந்த படத்தில் நடிகர் விமல் நடித்து இருக்கிறார் என்பது பலருக்கும் தெரியாத ஒன்றாக உள்ளது.

இதையும் பாருங்க : மக்களுக்கு சேவை செய்ய அரசு நடத்தும் கால் சென்டரில் பணிபுரியும் கார்த்தி பட நடிகை. யார் தெரியுமா ?

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து கிரீடம், குருவி, பந்தயம். காஞ்சிவரம் போன்ற பல படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். பின் இவர் நீண்ட பாத்திரமாக கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்தது பசங்க திரைப்படத்தில் தான். இந்நிலையில் தற்போது கில்லி படத்தில் விமல் நடித்திருந்த ஒரு சில காட்சியின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது விமல் தானா!! என்று ஆச்சரியத்துடன் கேட்டு வருகிறார்கள்.

மேலும், நாடே கொந்தளித்து கொண்டு இருக்கும் கொரோனா வைரஸினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில் கடந்த வாரம் நடிகர் விமல் அவர்கள் தனது சொந்த ஊரான மணப்பாறையில் தன் நண்பர்களுடன் களம் இறங்கி வீதியில் கிருமிநாசினி தெளித்தார். இதற்கு இவருக்கு பல பேர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Advertisement